மணம் வீசும் மணிச்சொற்கள்
மணம் வீசும் மணிச்சொற்கள், நபிமொழித் தொகுப்பு, அஷ்ஷெய்க் காலித் முஹம்மத் மின்ஹாஜ்(இஸ்லாஹி), இஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட், சென்னை 12, பக். 248, விலை 90ரூ.
இஸ்லாம் மார்க்கத்தைத் தெளிவாக அறிந்து கொள்ளும் உரைகல் ஒன்று இறை வேதம் குர்ஆன். மற்றொன்று முகம்மது நபி (ஸல்) அவர்களின் சொல், செயல் மற்றும் அங்கீகாரம் ஆகும். அதன் அடிப்படையிலான நபி மொழித் தொகுப்பே மணம் வீசும் மணிச்சொள்கள் நூலாக அமைந்துள்ளது. நபிகள் நாயகத்தின் ஒவ்வொரு அறிவிப்புக்கும் குர்ஆன் மூலமும், இஸ்லாமிய வரலாற்றில் இருந்தும் ஆசிரியர் தகவல்களைப் பதிவு செய்திருக்கிறார். இறைதூதரின் மொழிக்கு அளிக்கும் ஒவ்வொரு விளக்கங்களும் ஆழமாகவும் அழுத்தமாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆதமுடைய மகன் மரணித்துவிட்டால் அவனது மூன்ற நற்செயல்களுக்குரிய நற்கூலியைத் தவிர மற்ற எல்லா செய்கலின் நற்கூலிகளும் முடிவடைந்துவிடுகின்றன. நிலையான தர்மம், கல்வியறிவு, அவனுக்காகப் பிரார்த்திக்கின்ற குழந்தைகள் என்ற நபி மொழிக்கு தரப்பட்டுள்ள விளக்கங்கள் நம்மை நாமே சுயபரிசோதனை செய்துகொள்வதற்கு ஏற்ற அறிவுரைகளாகும். நபிகள் நாயக்கத்தின் அறிவுரைகளைப் புரிந்துகொள்ளும் வகையில் எளிமையான விளக்கங்களுடன் நடையும் கொண்டது இந்நூல். நன்றி: தினமணி, 23/12/13.