மணல்மேட்டில் இன்னுமொரு அழகிய வீடு
மணல்மேட்டில் இன்னுமொரு அழகிய வீடு, யமுனாராஜேந்திரன், டிஸ்கவரி புக் பேலஸ், விலை 300ரூ.
பல்வேறு காலகட்டங்களில் எழுத்தாளர் யமுனா ராஜேதிரன் எழுதிய 18 கட்டுரைகளின் தொகுப்பு. உலகம், இந்தியா மற்றும் தமிழக அளவில் நடைபெற்ற சம்பவங்களைக் கருப்பொருளாகக் கொண்டு எழுதப்பட்ட இந்தக் கட்டுரைகளை ஓர் ஆய்வுரை என்றே சொல்லலாம். ஜெயகாந்தனின் கருத்துலகம், எம்.ஜி.ஆர். எனும் மாபெரும் விருட்சம் போன்றவை யதார்த்த நிலையைப் பிரதிபலிக்கின்றன. நன்றி: தினத்தந்தி, 6/1/2016.
—-
நபி நேசம் நம் சுவாசம், மல்லவி பி.எம்.கலீல் ரஹ்மான், எஸ்.கே.எஸ். பப்ளிகேஷன்ஸ், விலை 100ரூ.
பெற்ற தாய், தந்தையை விட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீதே ஒவ்வொரு முஸ்லிம்களும் பிரியம் வைத்திருக்கிறார்கள். அவர்களைத் தங்களின் உயிரை விட மேலாக நேசிக்கிறார்கள். அத்தகைய மேன்மை மிக்க நபிளார் மீது ஏன் நேசம் கொள்ள வேண்டும்? அவர்களது சிறப்பியல்புகள் என்ன என்பதை மல்லவி பி.எம்.கலீல் ரஹ்மான் அழகிய முறையில் எழுதியுள்ளார். நன்றி: தினத்தந்தி, 6/1/2016.