பெண்களும் நலவாழ்வும்
பெண்களும் நலவாழ்வும், நா. மோகன்தாஸ், இமாலயா பதிப்பகம், விலை 100ரூ.
மனிதனைக் கருக்கொண்டு உருவாக்கும் பெண் மக்கள் நோயின்றி வாழ்ந்தால்தான், நல்ல மக்கள் செல்வத்தை உலகிற்குத் தர இயலும். மனித இனத்தின் ஆற்றல் வாய்ந்த பெண் மக்களை மனதில் கொண்டு பெண்ணின் உடல்கூறு அமைப்புகளை விளக்கி அவர்களுக்கு ஏற்படக்கூடிய நோய்களைக் குறித்தும், அவை வராமல் தடுக்கும் வழிமுறைகள் குறித்தும் பெண்கள் மிக எளிதாக புரிந்துகொள்ளும் வகையில் மருத்துவர் நா. மோகன்தாஸ் எழுதியுள்ள இந்நூல் இன்றைய காலகட்டத்திற்கு தேவையான ஒன்றாகும். நன்றி: தினத்தந்தி, 6/1/2016.
—-
இந்திய தேசத்திற்கு ஒரு நூறு வயது, சிலம்புச்செல்வர் டாக்டர் ம.பொ.சிவஞானம், பூங்கொடி பதிப்பகம், விலை 100ரூ.
சிலம்புச் செல்வர் டாக்டர் ம.பொ. சிவஞானம் செங்கோலில் தொடர் கட்டுரையாக எழுதிய கட்டுரையின் தொகுப்பு நூல். இந்திய தேசியக் காங்கிரஸ் தோன்றிய காலந்தொட்டு, தேச விடுதலைக்குப்பின்னும், 1985 வரையுள்ள ஒரு நூற்றாண்டு காலத்தில் காங்கிரஸ் புரிந்துள்ள சாதனைகளை விமர்சித்து இந்திய தேசியம் என்னும் தத்துவத்தின் விளக்கமாகவே இந்நூல் அமையப்பெற்றுள்ளது. தினத்தந்தி, 6/1/2016.