மது விழிப்புணர்வுக் கல்வி
மது விழிப்புணர்வுக் கல்வி, கோ. பெரியண்ணன், தமிழகக் கல்வி ஆராய்ச்சி வளர்ச்சி நிறுவனம், சென்னை, பக். 160, விலை 100ரூ.
மது விற்பனை இலக்கு, மதுவினால் ஏற்படும் விபத்துகள், மதுப்பழக்கத்தால் நோய்வாய்ப்பட்டு இறந்தவர்கள், நிதானம் இழந்து தற்கொலை செய்து கொண்டவர்கள் – மற்றவரைக் கொன்றவர்கள், மதுப் பழக்கத்திற்கு அடிமையாகி அசிங்கப்படும் இன்றைய இளம்தலைமுறையினர், பள்ளி, கல்லூரி மாணவ – மாணவிகள் பற்றிய செய்திகள் போன்றவற்றையெல்லாம் தொகுத்து வழங்கியிருக்கிறார் நூலாசிரியர். மது உருவான வரலாறு, புராணங்களிலும் சிற்றிலக்கியங்களிலும் காணக்கிடைக்கும் குடிப்பழக்கத்தின் கொடுமைகள் பற்றிய குறிப்புகள், நாட்டுப்புறப் பாடல்கள் வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்த முனைந்த விவரங்கள், மதுவுக்கு எதிராகப் போராடிய சான்றோர் பற்றிய விவரங்கள் நூலுக்கு வலு சேர்க்கின்றன. குடிப்பழக்கத்திலிருந்து குடி நோயாளிகளை திருத்தி அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்க முயலும் தன்னார்வலர்கள், தன்னார்வத் தொண்டு அமைப்புகள், குடிநோய் மீட்பு மையங்களின் விவரங்கள் ஆகியவற்றைப் பட்டியலிட்டுள்ளதன் மூலம் குடி நோயாளிகளுக்கு வழிகாட்டியிருக்கிறது இந்நூல். இன்றைய சூழலில் மது பற்றிய விழிப்புணர்வும் முயற்சியாக நூல் அமைந்திருக்கிறது. பாராட்டுகள். நன்றி: தினமணி, 23/3/2015.