மருதகாசி திரையிசைப் பாடல்கள்
மருதகாசி திரையிசைப் பாடல்கள், கவிஞர் பொன்.செல்லமுத்து, மணிவாசகர் பதிப்பகம், சென்னை, விலை 100ரூ.
To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-177-6.html தமிழ்த்திரை உலகில் கவியரசு கண்ணதாசனுக்கு முன்பே தடம் பதித்து பாடல்கள் எழுதியவர் மருதகாசி. சுமார் 250 படங்களுக்கு 4 ஆயிரம் பாடல்கள் எழுதியவர். அவருடைய பாடல்கள், புத்தகங்களாக தொகுப்பட்டு வருகின்றன. ஏற்கனவே 2 புத்தகங்கள் வெளிவந்துள்ளன. இது மூன்றாவது புத்தகம். இதில் மொத்தம் 190 பாடல்கள் இடம் பெற்றுள்ளன. எம்.ஜி.ஆர். சிவாஜிகணேசன், ஜெமினி கணேசன், டி.ஆர்.மகாலிங்கம் ஆகியோருக்காக எழுதப்பட்ட பல பாடல்கள் இதில் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. சமகாலக் கவிஞரான உடுமலை நாராயண கவி, மெட்டுக்கு பாட்டு எழுதுவரை வெறுப்பவர். ஆனால் மருதகாசி மெட்டுக்குப் பாட்டு எழுதுவதில் வல்லவர். எனவே மெட்டுக்கு பாட்டு எழுதும்படி தன்னை அழைக்கும் பட அதிபர்களை, மருதகாசியிடம் உடுமலை நாராயணகவி அனுப்பி வைத்தார் என்பது இப்புத்தகத்தில் காணப்படும் தகவல். நன்றி: தினத்தந்தி, 21/5/2014.
—-
இறை அருளார் இராமலிங்கர் வாழ்வும் வாக்கும், வானதி பதிப்பகம், சென்னை, விலை 200ரூ.
வடலூர் வள்ளல் பெருமான் இராமலிங்கரின் வாழ்க்கை வரலாற்று நூல். வாழ்க்கை வரலாறு என்ற பொருளில் 46 தலைப்புகளும், சத்திய ஞான வாக்கு என்ற பொருளில் 32 தலைப்புகளும் வள்ளலாரின் வாழ்வில் நடந்த உண்மை நிகழ்வுகளை உரைக்கின்றன. இந்நூலிலுள்ள பெரும்பாலான செய்திகளுக்குத் தக்க மேற்கோள்களை நூலாசிரியர் பா. கமலக்கண்ணன் சுட்டிக்காட்டியுள்ளார். நன்றி: தினத்தந்தி, 21/5/2014.