நல்லதாக நாலு வார்த்தை
நல்லதாக நாலு வார்த்தை, ஆப்பிள் பப்ளிஷிங், சென்னை, விலை 115ரூ.
எழுத்தாளர் சோம. வள்ளியப்பன், மனிதர்களைப் புரிந்துக் கொள்ளவும், வாழ்க்கையை வெற்றி கொள்ளும் வகையில் உறவு, மனம், பழக்கம், திறன், நேரம் ஆகிய 5 சிறுதலைப்புகளில் 27 கட்டுரைகளை படங்களுடன் தொகுத்துள்ளார். எளிய தமிழில் அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் நூல் அமைந்துள்ளது. நன்றி: தினத்தந்தி, 21/5/2014.
—-
சிம்மாசன சீக்ரெட், வெ. இறையன்பு ஐ.ஏ.எஸ்., நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, விலை 70ரூ.
இதுவரையில் 40 நூல்களை எழுதியுள்ள சிறந்த எழுத்தாளரான ஐ.ஏ.எஸ். அதிகாரி வெ. இறையன்புவின் 41வது நூல் சிம்மாசன சீக்ரெட். வாழ்க்கையில் உயர்ந்த நிலைக்கு, அதிலும் குறிப்பாக எந்த துறை என்றாலும் தலைமை பொறுப்பிற்கு செல்லவேண்டும் என்ற பயணத்தை தொடங்குபவர்கள், என்னென்ன பண்புகளை கொண்டிருக்க வேண்டும்? என்பதை சொல்லும் நூல். மனிதன் காடுகளில் வேட்டையாடி திரிந்தபோது எப்படி குழுவாக வாழ்ந்தான், அதில் ஒருவன் எப்படி தலைமைக்கு வந்தான் என்பதில் தொடங்கி, குரங்கிலிருந்து மனிதன் வந்தான் என்ற தத்துவத்தை மேற்கோள்காட்டி படிப்படியாக தலைமை பொறுப்பிற்கு வர விரும்புபவர்கள் என்னென்ன பண்புகளை பெறவேண்டும்? என்பதை 10 பண்புகளாக குறிப்பிட்டுள்ளார். இறுதியாக மிக சிறந்த நோக்கத்திற்காக உழைக்க நினைத்தால் நம் செயலுக்கு உலகமே ஒத்தாசை புரியும் என்று கூறும் இந்த நூல் இளைஞர் சமுதாயத்தினரிடம் இருக்க வேண்டிய நூலாகும். நன்றி: தினத்தந்தி, 21/5/2014.