முப்பெரும் புராணங்கள்
முப்பெரும் புராணங்கள், ஸ்ரீ செண்பகா பதிப்பகம், சென்னை, விலை 175ரூ.
To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0001-060-1.html சிவபுராணம், விநாயகர் புராணம், கந்த புராணம் ஆகிய புராணங்களின் தொகுப்பு நூல். எங்கும் எதிலும் நீக்கமற நிறைந்த சிவபெருமான் புரிந்த திருவிளையாடல் ஒவ்வொன்றுக்கும் ஒரு தத்துவம் உண்டு. பக்தியுடன் பூஜிப்பவருக்கு எல்லா நற்குணங்களையும் வழங்கும் சிவனின் திருவிளையாடல்கள் பலவற்றின் தொகுப்பே சிவபுராணம். விநாயக புராணத்தில் விநாயகருடைய பிறப்பு, பூஜிக்க வேண்டிய முறைகள், மந்திரங்கள், அன்றாட வாழ்க்கையில் கையாள வேண்டிய முறைகள் பற்றிய செய்திகள் விரிவாக கூறப்பட்டுள்ளன. கந்தபுராணம், முருகப்பெருமானின் திருவிளையாடல்களை விவரிப்பது. இம்மூன்று புராணங்களையும் பதர்வாஜர் இனிமையான, எளிமையான நடையில் தொகுத்தளித்துள்ளார். நன்றி: தினத்தந்தி, 21/5/2014.
—-
கொங்கு நாட்டுக் கதம்பம், சுப பாரதி பதிப்பகம், அந்தியூர் 638504, விலை 100ரூ.
தாரள வம்சத்தாரின் சமுதாய கோட்பாடுகளை எளிய கவிதைகளாக நூலாசிரியர் கவிஞர் சித்தமலை தூரன் எழுதி தொகுத்து உள்ளார். நூலைப் படிப்பதன் மூலம் இருவரி சொல் மாலையும், கடம்பவனம் நாட்டைப் பற்றியும் அறிந்து கொள்ள முடியும். நன்றி: தினத்தந்தி, 21/5/2014.