மருதநாயகம் கான்சாகிப்
மருதநாயகம் கான்சாகிப், செ. திவான், விகடன் பிரசுரம், அண்ணா சாலை, சென்னை 2, விலை 80ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-009-0.html
மருதநாயகம் என்ற மாவீரனின் சாகசங்களையும், அதிரடியான போர்த்திறன்களையும் விறுவிறுப்பான நடையில் பதிவு செய்திருக்கிறார் புத்தக ஆசிரியர் செ. திவான். ஆரம்ப காலத்தில் ஆங்கிலேயருடன் நட்பு பாராட்டினாலும் பின்னர் ஆங்கிலேயருக்கு சிம்மசொப்பனமாக விளங்ககியவர் மருதநாயகம் எனும் கான்சாகிப். கமல்ஹாசன் மிக பிரமாண்டமாக எடுக்க திட்டமிட்ட கதை இது. மருதநாயகம் வரலாற்றை மிக நுட்பமாக ஆராய்ந்து பல உண்மைகளை வெளிப்படுத்தியுள்ளார் ஆசிரியர். நன்றி: தினத்தந்தி 10/4/13.
—-
இந்திய கவிதைகள் புதுமையின் பாதை, தமிழ்நாடன், காவ்யா, சென்னை 24, பக். 287, விலை 220ரூ.
இந்தியாவில் உள்ள 18 மொழிகளில் உள்ள கவிதைகளைப் பற்றிய அறிமுகமாக மலர்ந்துள்ள நூல். தோஹ்ரி, சிந்தி, மைதிலி ஒரியா, கொங்கணி போன்ற பலரும் அறியாத மொழிகளில் கவிதைகளைப் பற்றியும் எல்லாரும் அறிந்த மலையாளம், கன்னடம், தெலுங்கு, மராத்தி, இந்தி, பஞ்சாபி போன்ற மொழிக்கவிதைகளைப் பற்றியும் தெரிந்து கொள்ள உதவும் நூல். ஒவ்வொரு மொழிக் கவிதைகளின் தோற்றம், வளர்ச்சி பற்றி நூல் விளக்குகிறது. அம்மொழியில் வந்த கவிதைகளின் போக்குகளை எடுத்துக்காட்ட அவற்றில் சில கவிதைகளை தமிழில் மொழிபெயர்த்துத் தந்திருப்பது சிறப்பு. நூலாசிரியர் கவிஞராக இருப்பதால் கவிதை உணர்வு குன்றாமல் சமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். பிறமொழிக் கவிதைகளிலிருந்து அம்மொழி மக்களின் சிந்தனைகளையும், உணர்வுகளையும் புரிந்து கொள்ள முடிகிறது. நல்ல கவிதைகளைப் படித்த மனநிறைவு ஏற்படுகிறது. இந்தியக் கவிதை பலவற்றுக்கும் சமமாக தமிழ்க் கவிதை பங்களித்திருப்பதைப் பார்க்கிறோம் என்ற முன்னுரையில் நூலாசிரியர் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. நன்றி: தினமணி 2/4/12.