மறைந்தும் மறையாத மானுடப் பறவை
மறைந்தும் மறையாத மானுடப் பறவை, கே. ஜீவபாரதி, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், 41பி, சிட்கோ இண்டஸ்டிரியஸ் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை 98, விலை 110ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0002-178-5.html
இந்திய கம்யூனிஸ்டு சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.முத்துகுமரன் விபத்தில் மரணம் அடைந்தது, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு பேரிழப்பாக அமைந்தது. அவருடைய முழு வாழ்க்கையையும் மற்றும் அரசியலில் ஆற்றிய தொண்டுகளையும் தொகுத்து அவரின் ஒராண்டு நினைவாக இந்த நூலை ஆசிரியர் வெளியிட்டுள்ளார்.
—-
தொடரும் பயணத்தில் படரும் நினைவுகள், அம்பத்தூர் ஆர். துரைசாமி, வாலாண்டினா பப்ளிகேஷன்ஸ், 21/10, லோகநாதன் நகர், இரண்டாம் தெரு, சூளைமேடு, சென்னை 94, விலை 25ரூ.
நியூ செஞ்சுரி புக் ஹவுசில் பணியில் சேர்ந்து பல்வேறு பொறுப்புகளை வகித்தவர் யுஎஸ்எஸ்ஆர் நடராசன். சோவியத் தூதரகத்தின் சோவியத் புத்தக மையத்தில் மேலாளராகவும் பதவி வகித்தவர். சோவியத் நூல்களை தமிழ் மக்களுக்கு கொண்டு வந்து சேர்ப்பதில் முனைப்போடு செயல்பட்டவர். இவருடைய இளமைகாலம் தொடங்கி, மணிவிழா வரை உள்ள அத்தனை சிறப்பு அம்சங்களையும் தாங்கி வெளிவந்த நூல்.
—-
சொல்லில் விளையும் சுகம், சேதுபதி, கவிதா பப்ளிகேஷன், 8, மாசிலாமணி தெரு, பாண்டிபஜார், தி.நகர், சென்னை 17, விலை 80ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0002-178-6.html
கலை, இலக்கிய, அறிவியல், ஆன்மிகம், சமூக நிலை, தத்துவங்கள் போன்றவை அடங்கிய 29 கட்டுரைகளின் தொகுப்பு. நன்றி:தினத்தந்தி, 25/9/2013.