அர்ச்சுனனின் தமிழ்க் காதலிகள்

அர்ச்சுனனின் தமிழ்க் காதலிகள், அ.கா. பெருமாள், காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில் 629001, பக். 224, விலை 175ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-809-0.html

பாரதக் கதைப்பகுதிகள் நம் பாரத நாட்டில் பழங்காலந்தொட்டு, இதிகாசமாய், பாட்டி சொல்லும் கதைகளாகவும், தெருக்கூத்துக்களாகவும், நாட்டுப்புறப்பாடல்களாகவும், இலக்கியங்களாகவும் வழக்காற்றில் உள்ளன. நாட்டுப்புற இயலை நாட்டார் இயல் என்று சொல்லும் வழக்கம் ஏற்பட்டது. நாட்டார் கதைகளாய் சிற்றூர்களில் (கிராமங்களில்) வழங்கும் பாரதக்கதைப் பகுதிகளைத் தொகுத்து அழகுற எழுதியுள்ளார். நாட்டார் வழக்காற்றியல் ஆய்வாளர் அ.கா. பெருமாள். அல்லி அரசாணி, புலந்திரன், அபிமன்யு, ஆரவல்லி, சூரவல்லி, பாண்டவர் வனவாசம், அரவான்கதை முதலிய கதைகள் பலவற்றையும் விரிவாக எழுதியுள்ளமை நன்று. சீதையின் பார்வையில் ஓடிய மாயமான பொன்மான்போல திரவுபதியின் எதிரிலும் ஒரு பொன்மான் ஓடியது. அந்தப் பொன்மானைப் பிடித்துத் தருமாறு தருமரிடம் திரவுபதி கேட்டாள். தருமன் பீமனிடம் கூற, பீமன் மானைத் துரத்திச் சென்று சோர்ந்தான். அங்கே தோன்றிய பொய்கையில் அது நச்சுப்பொய்கை என அறியாமல் வீமனும் அவன் தம்பியரும் ஒருவர் பின் ஒருவராகச் சென்று நீரைப் பருகி மாண்டுவிட்டனர். அவர்களை கண்ணப்பெருமான் உயிர்த்தெழச் செய்தார். இவ்வாறான கதைப்பகுதிகள் படிப்போர்க்கு ஆர்வத்தை உண்டாக்குகின்றன. நாட்டார் வழக்காற்றியல் கதைப்பகுதிகள் மாற்றம் பெற்றுள்ளன. திரவுபதி குறத்தி வடிவில் சென்று குறம் பாடுகின்றாள். வியாசரோடு ஒத்தும் மாறுபட்டும் அமைந்துள்ள பகுதிகள் சிந்தனையைத் தூண்டுகின்றன. நல்ல நூல். படித்து மகிழலாம். -பேரா. ம.நா. சந்தானகிருஷ்ணன்.  

—-

 

இதயம் இதமாய் இயங்க, டாக்டர் வெ. குழந்தைவேலு, வாலண்டி பப்ளிகேஷன்ஸ், பக். 200, விலை 200ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-368-2.html

முன்னைப்போல இல்லாமல் இப்போது மக்களிடையே இதயத்தைப் பற்றியும் இதயநோய்களைப் பற்றியும் அறிந்து கொள்ளும் ஆவல் அதிகரித்திருக்கிறது. அப்படிப்பட்டவர்களுக்கு இந்த நூல் ஒரு வரப்பிரசாதம். ரத்தக் கொதிப்பு, மாரடைப்பு, ஆகியவற்றிற்கான காரணங்கள், அவற்றைத் தடுக்கும் முறைகள், பராமரிப்பிற்கான வழிவகைகள் ஏராளமான மருத்துவ விளக்கங்கள் ஆலோசனைகள் தரப்பட்டுள்ளன. நிறைய வரைபடங்களுடன் விளக்கமளித்துள்ளது பாராட்டத்தக்கது (வரைபடங்கள் இன்னும் சற்று தெளிவாக இருந்திருக்கலாம்.). -மயிலை சிவா. நன்றி: தினமலர், 13/10/2013.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *