மீண்டும் ஒரு மழைக்காலத்தில்
மீண்டும் ஒரு மழைக்காலத்தில், கவிஞர் தியாரூ, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், பக். 194, விலை 210ரூ.
To buy this Tamil book online: http://www.nhm.in/shop/1000000024600.html மனிதாபிமானமும், சமூகப் பிரக்ஞையும், சிந்தனைத் தெளிவும் உள்ள சிறந்த, 21 கதைகள். ‘சாமுத்யகா’ என்ற முதல் கதையே தனிச்சிறப்பு வாய்ந்தது. மலர் விட்டு மலர் தாவும் வண்டு போன்ற கதாநாயகன். ஆனால் அவன் அன்பு மனைவியையே, ஒரு மாற்றான் காமப் பார்வை பார்க்கிறான் என்று உணரும் சமயத்தில், அவன் தவறு அவனுக்கு உரைக்கிறது. நடைபாதை வாசிகளை நேசியுங்கள் என்று சொல்லும் கதை, ‘தெரு நேரத் தாமரை’ சில மனிதர்கள் அன்புக்கு பின்னால் சுயநலம் ஒளிந்திருக்கும் என்று விளக்குவது, ‘என்ன தவம் செய்து விட்டேன்’ உறவுகளை உதாசீனப்படுத்தி விலகி ஓடும் மனநிலை தவறு என்று விளக்குகிறது, ‘தாய்மடி’ ஏழைப்பெண்கள் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாவதை சொல்லி உருகும் கதை, ‘தங்கக்காசு’. கவிஞர் தியாரூவின் கவிதைகளும், உரைநடை இலக்கியங்களும் பல நூல்களாக வெளியிடப்பட்டு, வாசகர்களின் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றன. குறுகிய கால இடைவெளியிலேயே, பல நூல்கள் மறுபதிப்பு செய்யப்பட்டுள்ளன. இந்த சிறுகதை தொகுதியும் பல பதிப்புகள் காணும். -எஸ். குரு. நன்றி: தினமலர், 7/2/2016.