முற்பிறவி மறுபிறவி ஆதாரங்கள்
முற்பிறவி மறுபிறவி ஆதாரங்கள், விக்கிரவாண்டி வி. ரவிச்சந்திரன், மேகதூதன் பதிப்பகம், 13, சின்னப்ப ராவுத்தர் தெரு, திருவல்லிக்கேணி, சென்னை 5, விலை 150ரூ.
முற்பிறவியில் காதல் நிறைவேறாமல் இறந்து போனவர்கள், மறுபிறவியில் ஒன்று சேருவதாக சில திரைப்படங்களில் பார்த்திருக்கிறோம். முற்பிறவி நினைவுகள் சிலருக்கு அபூர்வமாக வருவதுண்டு என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள் பல்வேறு நாடுகளில் முன்ஜென்ம நினைவுகள் வரப்பெற்ற சிலருடைய வாழ்க்கையை இந்நூலில் கூறுகிறார். விக்கிரவாண்டி வி. ரவிச்சந்திரன். அந்த சம்பவங்கள் விறுவிறுப்பான துப்பறியும் கதைகளைப் படிக்கும் உணர்வை ஏற்படுத்துகின்றன. மறுபிறவியில் நம்பிக்கை இல்லாதவர்களும் ரசித்துப் படிக்கும் வண்ணம் எழுதியுள்ள ஆசிரியரின் கைவண்ணத்தைப் பாராட்டலாம். நன்றி: தினத்தந்தி, 22/5/13
—-
தமிழர் சமுதாயம் கல்வி அரசியல், க.ப. அறவாணன், தமிழ்க்கோட்டம், 2, முனிரத்தினம் தெரு, அய்யாவு காலனி, அமைந்தகரை, சென்னை 29, விலை 110ரூ.
அரசும், அரசு எந்திரங்களும், காவல் துறையும், நீதித் துறையும், மக்கள் பிரதிநிதித்துவ அமைப்பும், ஊழல் துருவேறியும் செல் அரித்தும் கிடக்கின்றன. இவற்றைச் சரி செய்ய முடியும். சரி செய்தாக வேண்டும் என மக்களை எச்சரிக்கைப்படுத்துவதுதான் இந்நூலின் நோக்கம். இது குறித்து தமிழறிஞர் க.ப. அறவாணன் கடந்த ஓர் ஆண்டில் எழுதிய, பேசிய கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். சரியான சிந்தனை கூடத் தமிழரிடையே பின்பற்றப்படுவதில்லையே என்பது பெருங்கவலை. மிக மிகச் சாதாரணச் சட்ட திட்டங்கள், அறிவுரைகள், நீதிகளைக்கூட நம் மக்கள், முற்றாக அவமதிக்கிறார்கள். திருவள்ளுவர் காலம் தொட்டு மீண்டும் மீண்டும் சொல்லப் பெறும் நீதிகள், அச்சிட்ட புத்தகங்களில் ஆழ்ந்த உறக்கத்தில் ஆழ்த்தப்பட்டுள்ளன. எளிய சட்டங்கள் கூட எளிதாகப் புறக்கணிக்கப்படுகின்றன. பொது இடத்தில் எச்சில் துப்பாமலும், சிறுநீர் கழிக்காமலும் நம் மக்களை நம்மால் தடுக்க முடியவில்லை. நிகழ்காலத் தமிழர்களின் நிலை இதுதான் என்றாலும், இப்படியே இவர்களை விட்டுவிடுவதா? விட்டுவிடக் கூடாது எனத் தம் செயல், பேச்சு, எழுத்து, தொண்டு ஆகியவற்றால் முயலுவது தொடர்கின்றன. இவை தொடரத்தான் வேண்டும். வெற்றி அடையத்தான் வேண்டும் என சில ஆலோசனைகளை ஒவ்வொரு கட்டுரையிலும் வழங்கியிருக்கிறார் க.ப. அறவாண். நன்றி: தினத்தந்தி, 22/5/13
—-
விகடன் கல்வி மலர், விகடன் பிரசுரம், 757, அண்ணா சாலை, சென்னை 2, விலை 175ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-024-2.html
பிளஸ்2 படித்த மாணவர்கள் முன்நிற்கும் கேள்வி அடுத்து என்ன செய்யலாம் என்பதாகும். என்னன்ன மேல் படிப்பு படிக்கலாம் என்று இந்த புத்தகம் யோசனை கூறுகிறது. பல்வேறு துறைகளில் புகழ் பெற்றவர்கள் எழுதியுள்ள கட்டுரைகள், மாணவர்களுக்கு சிறந்த வழிகாட்டியாகத் திகழ்கின்றன. நன்றி: தினத்தந்தி, 22/5/13
