மேலே உயரே உச்சியிலே
மேலே உயரே உச்சியிலே, வெ. இறையன்பு ஐ.ஏ.எஸ்., விகடன் பிரசுரம், சென்னை, விலை 270ரூ.
பேச்சு மற்றும் எழுத்துக்கள் மூலமாக இளைஞர்கள் மனதில் தன்னம்பிக்கை விதையை விதைத்து அவர்களை வெற்றிப்படி நோக்கி அழைத்து செல்பவர் வெ. இறையன்பு ஐ.ஏ.எஸ். அவர் எழுதிய 40 கட்டுரைகளின் தொகுப்பு. விரக்தியின் விளிம்புக்குச் செல்லும் மனிதன், அழிவில் இருந்து மீள நெஞ்சக்கு ஆறுதல் களிபம்பு தடவுகிறார். முயன்றால் முடியாதது எதுவும் இல்லை; எனவே முடியாது என்ற வார்த்தைக்கு முடிவு கட்டுங்கள் என்பதை முடிவாகச் சொல்கிறார். வாழ்க்கையை வசப்படுத்தவும், வாசப்படுத்தவுமான வழிமுறைகளை நடைமுறை வாழ்க்கையில் இருந்தும், புராண, இதிகாசங்களில் இருந்தும் சான்று கூறி விளக்குகிறார். இந்த நூல் இளைஞர்களுக்கு வழிகாட்டும் கலங்கரை விளக்கம். வாழ்வை வளமாக்கும் அருமருந்து. நன்றி: தினத்தந்தி, 4/3/2015.
—-
தமிழர் கல்விச் சிந்தனைகள், க.ப.அறவாணன், தமிழ்க்கோட்டம் வெளியீடு, சென்னை, விலை 125ரூ.
கல்வித் துறையில் காணப்படும் நிறை குறைகளை ஆராயும் கட்டுரைகள் கொண்ட நூல். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் க.ப.அறவாணன் இந்த நூலை எழுதியுள்ளார். கல்வியின் முன்னேற்றத்திற்காக அவர் கூறும் யோசனைகள் சிந்திக்க வைக்கின்றன. கல்வித்துறையை சேர்ந்தவர்கள் அவசியம் படிக்க வேண்டிய நூல். நன்றி: தினத்தந்தி, 4/3/2015.