வயிற்று நோய்கள் நவீன சிகிச்சைகள்
வயிற்று நோய்கள் நவீன சிகிச்சைகள், டாக்டர் கு. கணேசன், வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை 17, விலை 85ரூ.
வயிறு பற்றிய விவரங்களை, குறிப்பாக செரிமான மண்டல உறுப்புகள் பற்றிய விவரங்களை எளிமையாகக் கூறும் நூல். உடல் உறுப்புகளில் ஏற்படும் நோய்கள் குறித்த விவரங்கள், பரிசோதனைகள், சிகிச்சை முறைகள், தடுப்பு முறைகள், உணவு முறைகள் ஆகிய அனைத்தையும் விளக்கமாக கூறுகிறது இந்நூல். வயிறு தொடர்புடைய பிரச்சினைகளுக்கு இன்றைய நடைமுறையில் இருக்கும் அத்தனை நவீன மருத்துவ முன்னேற்றங்களை விளக்கமாகக் கூறுவது பயமுறுத்துவதற்காக அல்ல. ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகத்தான் என்பதை வாசகர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்கிறார் நூலாசிரியர் டாக்டர் கு. கணேசன்.
—-
உங்களை நீங்கள் மாற்றிக் கொள்ளாதவரை, இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட், 138, பெரம்பூர் நெடுஞ்சாலை, சென்னை 12, விலை 120ரூ.
தினத்தந்தி ஆன்மீக மலரில் மவுலவி நூஹ் மஹ்ழரி எபதிய இஸ்லாம் போதிக்கும் நற்குணங்கள் என்ற தொடர் கட்டுரை இப்போது உங்களை நீங்கள் மாற்றிக் கொள்ளாதவரை என்ற தலைப்பில் நூலாக முகிழ்ந்துள்ளது. நம்பிக்கை, நாணயம், வாக்குறுது, பணிவு, நாவடக்கம் என்பன போன்ற 29 கட்டுரைகள். திருக்குர்ஆன் வழியிலும், நபிகளார் மொழியிலும் வாழ்வியல் பண்புகளை அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் எளிய இனிய தமிழ் நடையில் ஆசிரியர் எடுத்துரைக்கும் பாங்கு பாராட்டுக்குரியது. நன்றி: தினத்தந்தி, 19/2/2014.