வரலாற்றுச் சுவடுகள்
வரலாற்றுச் சுவடுகள் (நான்காம் பதிப்பு), தினத்தந்தி பதிப்பகம், விலை 650ரூ.
தமிழக மக்களின் அமோக வரவேற்பைப் பெற்ற வரலாற்றுச் சுவடுகள் நூலின் நான்காம் பதிப்பு இப்போது வெளிவந்துள்ளது. முதல் பதிப்பில் 50 ஆயிரம் பிரதிகள் அச்சிடப்பட்டு, உடனடியாக விற்பனையாகி, பதிப்புத்துறையில் மவுனப் புரட்சியை நடத்திக்காட்டியது வரலாற்றுச் சுவடுகள். இப்புத்தகத்தை வாங்க, வாசகர்கள் நீண்ட ‘கியூ’வரிசையில் நின்ற காட்சியை, முதல் முதலாகப் புத்தகக் கண்காட்சியில் மக்கள் கண்டு வியந்தனர். இப்போது நான்காம் பதிப்பில், 2013, 2014 ஆண்டுகளில் நடந்த முக்கிய நிகழ்ச்சிகளும், 2015ல் இதுவரை நடந்துள்ள முக்கிய நிகழ்ச்சிகளும் 32 பக்கங்கள் கொண்ட இணைப்பில் இடம் பெற்றள்ளன. குறிப்பாக நரேந்திர மோடி பிரதமரானது, இலங்கை தேர்தலில் ராஜபக்சே படுதோல்வி, இந்திய குடியரசு தினவிழாவில் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, டெல்லி மாநில சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் வெற்றி முதலியவை, புதிதாக இடம் பெற்றுள்ள முக்கிய செய்திகளில் சில. ஏராளமான வண்ணப் படங்களுடன் வழுவழுப்பான ஆர்ட் காகிதத்தில் அச்சிடப்பட்டுள்ள இப்புத்தகம், தரத்திலும் அமைப்பிலும் மேல்நாட்டுப் புத்தகங்களுக்கு சவால் விடும் விதத்தில் அமைந்துள்ளது. நன்றி: தினத்தந்தி, 18/3/2015.
—-
இமாலய யாத்திரை, குகஸ்ரீ வாரியார் பதிப்பகம், சென்னை, விலை 37ரூ.
திருமுருக கிருபானந்தவாரியார், 1961ல் இமயமலைக்கு யாத்திரை சென்றார். கேதாரநாத், பத்ரிநாத், துவாரகை, உதயபூர், டெல்லி, ஆக்ரா, ஜெயப்பூர் முதலிய இடங்களில் சுற்றுப்பயணம் செய்தார். 63நாள் சுற்றுப்பயணம் பற்றி எழில் கொஞ்சும் நடையில் அவர் எழுதியுள்ள புத்தகம் இது. தாஜ்மகால் பற்றியும், பக்திஸ்தலங்கள் பற்றியும் வாரியார் வர்ணனை நெஞ்சை கொள்ளை கொள்கிறது. நன்றி: தினத்தந்தி, 18/3/2015.