வாழ்க்கை வாழ்வதற்கே

வாழ்க்கை வாழ்வதற்கே, திருநாவுக்கரசு, அட்சரா பதிப்பகம், சென்னை, பக். 160, விலை 140ரூ.

வாழ்க்கை என்பது வரம். அதை நாம் அனுபவித்து வாழவேண்டுமே தவிர, ஒரு சில தோல்விகள் காரணமாக நாம் அதை இழந்துவிடக் கூடாது. முக்கியமாக தற்கொலை எண்ணம் கூடவே கூடாது என ஆணித்தரமாக நூலாசிரியர் விளக்குகிறார். ஒவ்வொர் வயதையும் நாம் கடக்கும்போது நம் மனதும் உடலும் பல்வேறு உளவியல் சிக்கல்களையும், மாறுதல்களையும் கையோடு கொண்டுவரும். அப்போது ஏற்படும் மன மாற்றங்களின் காரணமாக ஒரு சிலர் தற்கொலை செய்து உயிரை மாய்த்துக் கொள்கின்றனர். இந்நூலில் அதற்கான எண்ணங்களில் இருந்து எப்படி வெளியே வருவது என்பது சிறப்பாகக் கூறப்பட்டுள்ளது. முக்கியமாகக் காதல் தோல்விகளால் எடுக்கப்படும் விபரீத முடிவுகள், கூட்டுத் தற்கொலை அதற்கான தீர்வு என 26 கட்டுரைகள் மூலமாக அறிவுரைகளையும், ஆலோசனைகளையும் நூலாசிரியர் வழங்குகிறார். இந்நூலைப் படிக்கும் வாசகர்களுக்கு தற்கொலை எண்ணம் உள்ள பிறரை மீட்டெடுப்பதற்கான வழிமுறைகளையும் கற்றுக் கொடுக்கிறார். எனவே, இந்நூல் அனைவரும் கடந்து வரும் பாதையைக் காண்பித்து தீர்வு கொடுக்கும் வழிகாட்டி. நன்றி: தினமணி, 16/2/2015.

Leave a Reply

Your email address will not be published.