தினம் ஒரு மந்திரம்

தினம் ஒரு மந்திரம், தொகுப்பு திலகவதி, அட்சரா பதிப்பகம், விலை 200ரூ. பத்தாம் திருமுறையான திருமந்திரம், தமிழ் மெய்யியலின் முதன்மை நூல்களில் ஒன்று. அன்பே சிவம், ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று திருமூலரின் மந்திரங்கள் இன்னும் நம்மை வழிநடத்திக்கொண்டிருக்கின்றன. மெய்யியலோடு வாழ்வியல் நெறிகளையும் அன்றைய நாளின் மருத்துவம், வானியல் கருத்துகளையும் போதிக்கும் திருமந்திரம், 3000 மந்திரங்களைக் கொண்டது. ஒவ்வொரு நாளும் ஒரு மந்திரத்தைப் படித்து பயனடையும்வகையில் 365 மந்திரங்களைத் தேர்ந்தெடுத்து தொகுத்து எளிய உரையையும் அளித்துள்ளார் திலகவதி. நன்றி: தமிழ் இந்து, 9/2/19. […]

Read more

வாழ்க்கை வாழ்வதற்கே

வாழ்க்கை வாழ்வதற்கே, திருநாவுக்கரசு, அட்சரா பதிப்பகம், சென்னை, பக். 160, விலை 140ரூ. வாழ்க்கை என்பது வரம். அதை நாம் அனுபவித்து வாழவேண்டுமே தவிர, ஒரு சில தோல்விகள் காரணமாக நாம் அதை இழந்துவிடக் கூடாது. முக்கியமாக தற்கொலை எண்ணம் கூடவே கூடாது என ஆணித்தரமாக நூலாசிரியர் விளக்குகிறார். ஒவ்வொர் வயதையும் நாம் கடக்கும்போது நம் மனதும் உடலும் பல்வேறு உளவியல் சிக்கல்களையும், மாறுதல்களையும் கையோடு கொண்டுவரும். அப்போது ஏற்படும் மன மாற்றங்களின் காரணமாக ஒரு சிலர் தற்கொலை செய்து உயிரை மாய்த்துக் கொள்கின்றனர். […]

Read more

மதுரை அரசி

மதுரை அரசி, இளங்கோ, இகம் இல்லம், பக். 158, விலை 57ரூ. அங்கம் ஒன்றுக்கு நான்கு காட்சிகளாக நான்கு அங்கங்களைக் கொண்ட மதுரை அரசி என்னும் இப்புதுக்கவிதை நாடக நூல். கி.பி. 1812ல் மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்த ரோஸ் பீட்டர் வாழ்வில் நடந்த வரலாற்று உண்மையை மையப்படுத்தி தடாதகை என்ற மதுரை மீனாட்சியின் வரலாற்றை முழுமையாக விவரிக்கிறது. பல்வேறு புராணச் செய்திகள் உடன் மாலிக்காப்பூர் படையெடுப்பு, குமாரகம்பணனின் மதுரை வருகை, மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் அரங்கேற்றம் போன்ற பல்வேறு வரலாற்றுச் செய்திகள் […]

Read more