விவேக சிந்தாமணி
விவேக சிந்தாமணி, புலவர் தமிழமுதன், முல்லை நிலையம், 9, பாரதி நகர், சென்னை 17, பக். 128, விலை 45ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0001-602-2.html கருத்துக்களைக் கூறும் நூல்கள் பலவும் நல்லனவற்றையும் தீயனவற்றையும் எடுத்துக் கூறி, மனிதன் சிறந்து வாழ வழிகாட்டிகளாக விளங்குவன. அந்த வகையில் காலத்தால் பிற்பட்ட அறநூல்களில் ஒன்றாக விளங்கும் விவேக சிந்தாமணி.
எளிமையான அறவுரைகளைச் சுவைபடக் கூறுகிறது. இதன் ஆசிரியர் பெயர் தெரியவில்லை. காலமும் அப்படியே. கற்பனையும் உவமையும் அமைந்த பல பாடல்களைக் கொண்ட இந்த நூல் விருத்தம், வெண்பா ஆகிய யாப்புகளில் இயற்றப்பட்டுள்ளது. கடவுள் வாழ்த்தைச் சேர்த்து நூறு பாடல்கள் இந்நூலில் உள்ளன. மற்ற நூல்களில் இல்லாத சில புதிய கருத்துக்கள் இடம் பெற்றுள்ளன. நாயை எப்படித்தான் வளர்த்தாலும், அது நாயாக இருக்குமே தவிர, உயர்ந்த விலங்காக இருக்க முடியாது. அன்போடு இட்ட உணவு அமிழ்தம் போன்றது. அன்பின்றி இட்ட உணவோ நஞ்சை ஒப்பது. பிறருக்கு ஒன்றைத் தராதவன் ஏழு பிறப்பிலும் இழிந்த பிறப்பு. கற்பில்லாத பெண்களைக் கனவிலும் நம்பக்கூடாது. இஞ்சி, நெல்லிக்காய், கீரை, பாகற்காய், கஞ்சி, தயிர் ஆகியவற்றை இரவில் உண்டால் வீட்டிலிருந்த திருமகள் விலகிவிடுவாள் போன்ற புதுக்கருத்துக்களைக் கூறுகிறது. அந்நூல் எழுந்த கால கட்டத்தையே இப்படிப்பட்ட கருத்துக்கள் பிரதிபலிக்கின்றன. -இராம. குருநாதன்.
—-
கண் நோய்களும் பாதுகாப்பு முறைகளும், டாக்டர் வி.எம். லோகநாதன், மணிமேகலைப் பிரசுரம், தபால் பெட்டி எண் 1447, தி.நகர், சென்னை 17, பக். 168, விலை 90ரூ.
கண் நோய்கள் வராமல் தடுக்க சிறந்த கருத்துக்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. சிறந்த கண் மருத்துவரான ஆசிரியர், தன் அனுபவத்தில் சந்தித்த விஷயங்களை, சிறப்பாக இந்த நூலில் எழுதியிருக்கிறார். பொதுமக்கள் மட்டும் அல்ல, செவிலியர்கள், டாக்டர்கள் என அனைவரும் படித்தறிய சிறப்பான ஆதாரத்துடன் கூடிய தகவல்கள் கொண்ட நூல். நன்றி: தினமலர், 2/3/2014.