வெற்றிக்கொடி கட்டு

வெற்றிக்கொடி கட்டு, நாகூர் ருமி, சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், பக்.120, விலை 80ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-392-3.html

பள்ளி, கல்லூரியில் படிக்கும் காலத்தில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கனவு, இலக்கு, லட்சியம் என்று இருந்திருக்கும். கல்லூரியை விட்டு வெளியே வந்து நிதர்சனத்தை எதிர்கொள்ளும்போது, பலருக்கு அவர்களது கனவுகளும் இலக்குகளும் எங்கோ விலகிச் சென்றிருக்கும். இது யதார்த்தம். அப்படிப்பட்டவர்களை வழி நடத்திச் செல்லும் நிலையில் உள்ள பெற்றோருக்கும், மூத்தோருக்கும் உதவும் வகையில், இந்த நூலை எழுதியிருக்கிறார் ஆசிரியர். கால் நூற்றாண்டுக்கும் மேலாகப் பல்வேறு மாணவர்களுடன் பழகியதில், தனக்கு ஏற்பட்ட அனுபவங்களின் தாக்கத்தில், உருவாக்கப்பட்டிருக்கிறது. பலஇடங்களில் நகைச்சுவையாக எழுதியிருந்தபோதிலும், சீரியசாகச் சிந்திக்கவும் வைத்திருக்கிறார் ஆசிரியர். -மயிலை சிவா. நன்றி: தினமலர், 15/9/2013.  

—-

 

மயிலம் முருகன் பிள்ளைத்தமிழ், வைத்தியநாத தேசிகர், மயிலம், பொம்மபுர ஆதின வெளியீடு, மயிலம், பக். 224, விலை 135ரூ.

செம்பொன் மயிலைக்கிரி உகந்து வளர் கந்தனை, வீரசைவ பாரம்பரிய மடத்தின் பாரம்பரியத்தை போற்றும், வைத்தியநாத தேசிகர் எழுதிய பிள்ளைத்தமிழ், சந்தமிக்க தமிழுடன் கூடிய இந்த பிரபந்தத்தை தமிழுடன் கூடிய இந்த பிரபந்தத்தை, தமிழ் உலகம் வரவேற்கும்.  

—-

 

விவேக சிந்தாமணி, முல்லை நிலையம், தி.நகர், சென்னை 600017, விலை 45ரூ.

ஓசை நயம் மிக்க பாடல்களை உடைய இந்த தமிழ் நூல், பல்வேறு புலவர்கள் பாடிய தொகுப்பு. அறம் சார்ந்த வாழ்க்கைக்கு இதில் பல தகவல் உள்ளன. படித்து சுவைக்கலாம். நன்றி: தினமலர், 15/9/2013.

Leave a Reply

Your email address will not be published.