வெல்லும் சொல்(வைகோவின் இலக்கியச் சொற்பொழிவுகள்)

வைகோவின் இலக்கியச் சொற்பொழிவுகள் – வெல்லும் சொல், விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை 2, விலை 300ரூ.

அரசியல் பற்றி மட்டுமல்ல, இலக்கியம் பற்றியும் மனதைக் கவரும் வண்ணம் சொற்பொழிவு ஆற்றுவதில் வல்லவர் வைகோ. அவருடைய இலக்கியச் சொற்பொழிவுகள் அடங்கிய நூல் வெல்லும் சொல். சிலப்பதிகாரம் பற்றிய அவருடைய விரிவான உரையில், கண்ணகி கோவலன் வரலாற்றை சிறந்த முறையில் எடுத்துக் கூறுவதுடன் சிலம்புக்கு நிகரான காப்பியம் வேறு எந்த மொழியிலும் கிடையாது என்று அடித்துக் கூறுகிறார். கல்கியின் அற்புத நாவல்களான பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம் ஆகியவை பற்றிய வர்ணனையை மீண்டும் மீண்டும் படித்து ரசிக்கலாம். காரணம் இந்த இரண்டு மகத்தான கதைகளின் சுருக்கமும் அவர் உரையில் அடங்கியுள்ளது. மொத்தத்தில், சிறந்த இலக்கிய விருந்து இந்தப் புத்தகம்.  

—-

 

நுனிப்புல் மேய்தல், காந்தளகம், 4, முதல்மாடி, ரகிசா கட்டிடம், 68, அண்ணாசாலை, சென்னை 2, விலை 100ரூ.

நூலாசிரியர் சுவிஸ் மூர்த்தி மாஸ்ரர், இலங்கைத் தமிழர், இனக்கலவரம் காரணமாக சுவிட்சர்லாந்தில் குடியேறியவர். அவர் தமது அனுபவங்களை கட்டுரைகளாக வடித்துள்ளார். இலங்கையில் நிகழ்ந்த சிலகொடுமைகளை அவர் விவரிக்கும்போது, நமது கண்கள் கலங்குகின்றன. இலங்கைத் தமிழர்கள் பயன்படுத்தும் சொற்களைக் கொண்டு எழுதப்பட்டுள்ள இக்கட்டுரைகள் உணர்ச்சிமயமானவை.

 

—-

  சித்தர்களை அறிவோம், எம். ஆழகர்சாமி, எஸ்.எஸ். பப்ளிகேஷன், 8/2, போலீஸ் குவாட்டர்ஸ் ரோடு, தி.நகர், சென்னை 17, விலை 65ரூ.

இறை நிலை ஞானிகளான சித்தர்கள் குறித்து படங்களுடன் சுருக்கமாக எளிமையாக தொகுத்து கூறப்பட்டுள்ளது. சித்தர்களின் சக்தி குறித்து தெரிந்து கொள்ள விரும்புவோர் படித்து பயன்பெறலாம். நன்றி: தினத்தந்தி, 16/1/2014.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *