பிக்பாஸ்

பிக்பாஸ், தி.குலசேகர், எஸ்.எஸ்.பப்ளிகேஷன், விலை 100ரூ. 15 பேரை நூறு நாட்களுக்கு ஒரு வீட்டுக்குள்ளே அவர்கள் விருப்பத்தோடு இருக்க வைத்து அவர்களது நடவடிக்கைகளை சோதிக்கும் நிகழ்ச்சி பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை ஓவியா. மக்களின் மனதில் தனதான தனித்த அடையாளங்களினால், நிரந்தர இடத்தைப் பெற்று விட்டார். அது குறித்து இந்த நூலில் தி.குலசேகர் சுவையாக அலசுகிறார். நன்றி: தினத்தந்தி, 15/11/2017

Read more

குருவியும் குரங்கும்(குழந்தைகளுக்கான புத்தகங்கள்)

குழந்தைகளுக்கான புத்தகங்கள், எஸ்.எஸ். பப்ளிகேஷன், விலை 25ரூ. ‘குருவியும் குரங்கும்’, ‘புத்திசாதுர்ய வாத்து’, ‘பேராசைக்கார நரி’, ‘புத்திசாலி முயல்’, ‘ஒட்டகமும் நண்பர்களும்’, ‘முட்டாள் ஆமை’, ‘சிங்கமும் சுண்டெலியும்’ ஆகிய தலைப்புகளில் குழந்தைகளுக்கான புத்தகங்களை வண்ணப்படங்களுடன் எஸ்.எஸ். பப்ளிகேஷன்ஸ் வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு புத்தகமும் விலை 25ரூ. நன்றி: தினத்தந்தி, 14/9/2016. —-   பூனை மீசை சிம்கார்டு கதைகள், இயக்குனர் ‘டூ’ ஸ்ரீராம், தமிழ் அறிவு பதிப்பகம், விலை 50ரூ. சிறிய வடிவம் கொண்ட சிம்கார்டு மூலம் உலகில் உள்ள மக்களை இணைக்க முடியும். அதே […]

Read more

எழுச்சிநாயகன் விவேகானந்தர்

எழுச்சிநாயகன் விவேகானந்தர்  சி.எஸ்.தேவநாதன், எஸ்.எஸ்.பப்ளிகேஷன்,  பக்.192, விலை ரூ.120. விவேகானந்தரின் இளமைக் காலத்திலிருந்து அவர் வாழ்வில் நிகழ்ந்த நிகழ்ச்சிகளைச் சொல்லும் வாழ்க்கை வரலாற்று நூல் என்றும் இதனைச் சொல்லலாம். ஆனால் அந்த எல்லையோடு இந்நூல் நின்றுவிடவில்லை. விவேகானந்தரின் சிந்தனைகள் வளர்ந்தவிதம், ஒவ்வொரு விஷயங்களைப் பற்றியும் அவருடைய தெளிவான கருத்துகள் தோன்றியவிதம் ஆகியவற்றை இந்நூல் விளக்குகிறது. விவேகானந்தரின் வாலிபப் பருவத்தில், அவரை விரும்பி அவர் இருக்கும் இடத்துக்கு இரவில் வந்த ஓர் இளம் பெண்ணைப் பார்த்து, “”அம்மா, இது தகாத காரியம் என்பதை உணருங்கள். உடனே இங்கிருந்து […]

Read more

ஸ்ரீ அரவிந்தர் ஸ்ரீ அன்னையின் பொன்மொழிகள்

ஸ்ரீ அரவிந்தர் ஸ்ரீ அன்னையின் பொன்மொழிகள், நர்மதா பதிப்பகம், சென்னை, விலை 100ரூ. புதுவையில் ஆசிரமம் அமைத்து லட்சக்கணக்கான பக்தர்களுக்கு வழி காட்டிய அரவிந்தர், அன்னை ஆகியோரின் பொன்மொழிகள் அடங்கிய புத்தகம். அழகிய கட்டமைப்புடன் கண்ணைக் கவரும் வண்ணம் அமைந்துள்ளது. தினத்தந்தி.   —-   எளிய செரிமான உணவுகள், வை. குமரவேல் என்ற சகாதேவன், தாமரை  பதிப்பகம், சென்னை, விலை 60ரூ. உணவே மருந்து என்ற கருத்தை உணர்த்துவதற்காகவும், அன்றாடம் நம்முடைய உணவு முறைகளில் நாம் சேர்த்து கொள்ள வேண்டியது, தவிர்க்க வேண்டியதை […]

Read more

இந்திய ஒருமைப்பாடு

இந்திய ஒருமைப்பாடு, குறித்தலை பாலா, பாலா கடம்பனேஸ்வரர் பதிப்பகம், 58, ஆர்.எம்.ஆர்.இல்லம், வைகை நல்லூர், குளித்தலை 639104, விலை 50ரூ. அன்பு, சகிப்புத்தன்மை, உதவும் குணம், சாதி சமய வேறுபாடற்ற நிலை என ஒருமைப்பாட்டிற்கு உரம் சேர்க்கும் கருத்துக்களுடன் நேர்மை, குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பு, தன் கையே தனக்குதவி போன்ற கருத்துக்களை 10 சிறுகதைகள் மூலம் நயம்பட தந்துள்ளார் ஆசிரியர்.   —-   குழலின் மொழி, நந்தலாலா சேவா சமிதி டிரஸ்ட், 2/4, டாக்டர் ரங்கா ரோடு, மைலாப்பூர், சென்னை 4, […]

Read more

வெல்லும் சொல்(வைகோவின் இலக்கியச் சொற்பொழிவுகள்)

வைகோவின் இலக்கியச் சொற்பொழிவுகள் – வெல்லும் சொல், விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை 2, விலை 300ரூ. அரசியல் பற்றி மட்டுமல்ல, இலக்கியம் பற்றியும் மனதைக் கவரும் வண்ணம் சொற்பொழிவு ஆற்றுவதில் வல்லவர் வைகோ. அவருடைய இலக்கியச் சொற்பொழிவுகள் அடங்கிய நூல் வெல்லும் சொல். சிலப்பதிகாரம் பற்றிய அவருடைய விரிவான உரையில், கண்ணகி கோவலன் வரலாற்றை சிறந்த முறையில் எடுத்துக் கூறுவதுடன் சிலம்புக்கு நிகரான காப்பியம் வேறு எந்த மொழியிலும் கிடையாது என்று அடித்துக் கூறுகிறார். கல்கியின் அற்புத நாவல்களான பொன்னியின் செல்வன், […]

Read more

குருசமர்ப்பணம்

குருசமர்ப்பணம், ஸ்ரீ ஐயப்ப பஜனை சங்கம், வில்லிவாக்கம் ஸ்ரீ விஸ்வநாத சர்மா சாஸ்தா அறக்கட்டளை, சென்னை, பக். 240, விலை 250ரூ. காஞ்சி பரமாச்சாரியார் மகா பெரியவரின், அருள்மொழிகளான பொன்மொழிகளைத் தொகுத்து, அற்புதமான நூலாக வெளியிட்டுள்ளனர். நூலின் தொடக்கத்தில் ஆதிசங்கரர் முதல், விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் வரை சங்கராச்சாரியார்கள் எழுபதின்மர் படங்களும், குறிப்புகளும் அழகாக அச்சிடப் பெற்றுள்ளன. மகா பெரியவர் படங்களை இடப்பக்கத்தில் அச்சிட்டு வலப் பக்கத்தில் அவர்கள் அருளிய ஞான மொழிகளை முத்துக் கருத்துகளை தந்த முறை மிக நன்று. புண்ணியங்களால் நன்மை […]

Read more

உயிரே உனக்காக

உயிரே உனக்காக, ஏ. நடராஜன், கவிதா பப்ளிகேஷன்ஸ், 8, மாசிலாமணி தெரு, பாண்டிபஜார், தி.நகர், சென்னை 17, விலை 250. சென்னை தொலைக்காட்சி முன்னாள் இயக்குனர் ஏ. நடராஜன் சிறந்த எழுத்தாளர் என்று முத்திரை பதித்தவர். நாவல்களும், சிறுகதைகளும் எழுதி புகழ்பெற்றவர். அவருடைய சிறந்த நாவல்களில் ஒன்று உயிரே உனக்காக. ஹாலிவுட் இருக்கும் லாஸ் ஏஞ்சல்ஸ் நகர பின்னணியில் கதையை பின்னியிருக்கும் நடராஜன், வர்ணனைகள் மூலம் அந்த நகருக்கே நம்மை அழைத்துப் போகிறார். நரேன், மதுரிமா, கவிதை, வைதீஸ்வரன் என்ற நான்கு கதாபாத்திரங்களை வைத்து, […]

Read more

மரங்களும் திருத்தலங்களும்

மரங்களும் திருத்தலங்களும் , ஆசிரியர்: டாக்டர் ச.தமிழரசன், வெளியிட்டோர்: குறிஞ்சி பதிப்பகம், 2, சேவியர் நகர், தொல்காப்பியர் சதுக்கம் அருகில், தஞ்சாவூர் – 613 001; விலை: ரூ. 80. புல், செடி, கொடி, மரங்கள் போன்ற 60 வகையான தாவரங்களின் இலக்கியப் பெயர்கள், அவற்றின் மருத்துவ பயன்கள், தாவரவியல் பண்புகள் பற்றியும், அவை தல விருட்சங்களாக உள்ள தேவாரப்பாடல் பெற்ற திருக்கோவிகளைப் பற்றிய விளக்கமும் இடம் பெற்றுள்ள சிறந்த நூல். பூமி வெப்பமடைதலைத் தடுக்க ஒரே வழி மரம் வளர்ப்பு மட்டுமே. அதன் […]

Read more