வையத் தலைமைகொள்

வையத் தலைமைகொள், வெ. இறையன்பு ஐ.ஏ.எஸ், புதிய தலைமுறை பதிப்பகம், சென்னை, விலை 300ரூ.

எந்த ஒரு துறையில் யார் கால் பதித்தாலும், அது கீழ்மட்டம் முதல் மேல்மட்டம் வரை எந்த இடம் என்றாலும், மற்றவர்களை விட உயர்ந்த இடத்தில் திறமையோடு மிளிர்வதை காட்ட வேண்டும் என்ற இயல்பு உள்ளவர்கள் தான் சிறந்தவர் என்று பொருள்படுவர் ஆவார். அப்படி தனித்துவத்தை அடைய வேண்டும் என்றால் அந்த நிலை தானாக வந்துவிடாது. உழைப்பே உயர்ந்த ஓய்வு என்று தொடங்கி என்னென்ன வகை முயற்சிகளை மேற்கொண்டால் இறுதியாக தலைமை கொள்ள முடியும் என்பதை 48 அத்தியாயங்களில் வெ. இறையன்பு ஐ.ஏ.எஸ். வடித்து கொடுத்திருக்கும் நூல் வையத் தலைமைகொள். வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று துடிக்கும் ஒவ்வொரு இளைஞனும், முன்னேறிய பிறகு தக்க வைத்து கொள்ள விரும்பும் ஒவ்வொருவரும் ஒரு முறை அல்ல. இருமுறை அல்ல வாழ்க்கை முழுவதும் படிக்க வேண்டிய நூல். நன்றி: தினத்தந்தி, 29/4/2015.  

—-

மீரா, இரா. மோகன், சாகித்ய அகாடமி, சென்னை, விலை 50ரூ.

இந்திய இலக்கிய சிற்பிகள் என்ற வரிசையில் எழுத்தாளர்கள், கவிஞர்கள், பத்திரிகையாளர்கள், அறிஞர்கள் வரலாற்றை சாகித்ய அகாடமி வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் பேராசிரியர், கவிஞர், கட்டுரை ஆசிரியர், பதிப்பாளர் போன்ற பன்முகத் திறன் கொண்ட மீராவின் வாழ்க்கை நிகழ்வுகளையும், படைப்புகள் குறித்தும் பேராசிரியர் இரா. மோகன் எழுதியுள்ளார். மீராவின் மரபுக் கவிதைகள், வசன கவிதைகள், கவியரங்கக் கவிதைகள், கட்டுரைகளில் இருந்து முத்திரை பதித்த சொற்றொடர்களை மேற்கோள் காட்டி விளக்கி இருப்பது நூலுக்கு சுவை சேர்க்கிறது. நன்றி: தினத்தந்தி, 29/4/2015.

Leave a Reply

Your email address will not be published.