ஸ்ரீ பாஷ்யம் (பிரம்ம சூத்திர விளக்கம்)

ஸ்ரீ பாஷ்யம் (பிரம்ம சூத்திர விளக்கம்), ஸ்ரீரங்கம் சடகோப முத்துஸ்ரீநிவாசன், செண்பகா பதிப்பகம், 32 பி, கிருஷ்ணா தெரு, பாண்டிபஜார், சென்னை 17, விலை 275ரூ

வேதங்களை எழுதிய வியாசரால் பிரம்மசூத்திரம் நூல் அருளப்பட்டது. அதற்கு வடமொழி உரை எழுதினார் ராமானுஜர். அது ஸ்ரீ பாஷ்யம் என்ற புகழ்பெற்ற நூலாகும். வேதங்களில் பயிற்சி, வடமொழி இலக்கண நூல்களில் தேர்ச்சி, வேதம் சார்ந்த பிற மத கருத்துக்களை விளக்கும் நூல்களை படித்த அறிவு மூலமாகத்தான் ஸ்ரீ பாஷ்ம் நூலை முழுமைக கற்றுணர முடியும் என்ற நிலை இருக்கிறது. அதனால் இதனை ஸ்ரீ பாஷ்யம் (பிரம்ம சூத்திர விளக்கம்) என்ற தமிழாக்க பதிப்பின் வாயிலாக அனைவரும் எளிதில் கற்றுணர்ந்து கொள்ளும் வகையில் செய்துள்ளார் நூலாசிரியர். இதனால் ஸ்ரீ பாஷ்யத்தை கற்றும், கற்பித்தும் வாழ்நாளை கழிக்க வேண்டும் என்று ராமானுஜர் கூறியது மெய்ப்பட வழி கிடைத்துள்ளது நன்றி: தினத்தந்தி, 15/5/2013.  

—-

 

பதஞ்சலி முனிவரின் அட்டமா சித்திகள், வேணுசீனிவாசன், சங்கர் பதிப்பகம், 15/21, டீச்சர்ஸ் கில்டு காலனி, 2வது தெரு, ராஜாஜி நகர் விரிவு, வில்லிவாக்கம், சென்னை 49, விலை 120ரூ.

யோக நெறிகளை சூத்திரங்களாக்கி உலகிற்கு அளித்த பெருமைக்குரியவர் பதஞ்சலி முனிவர். அந்த பதஞ்சலி முனிவர் யார்? யோகப் பயிற்சியின் மூலமாக அடையக்கூடிய அட்டமா சித்திகள், அந்த சித்திகளை அடைந்த ஞானிகள், மகான்கள் குறித்து இந்த நூலில் ஆசிரியர் தொகுத்துள்ளார். யோக பயிற்சியை மேற்கொள்ள தூண்டும் விதமாக இந்த நூல் வெளிவந்துள்ளது. நன்றி: தினத்தந்தி, 15/5/2013.  

—-

 

இஸ்லாமியச் சட்டக் கருவூலம், பிக்ஹுஸ் ஸுன்னா, தமிழில்-மவுலவி நூஹ் மஹ்ழரி, இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட், 138, பெரம்பூர் நெடுஞ்சாலை, சென்னை 12, முதல்பாகம் 80ரூ, இரண்டாம் பாகம் 190ரூ.

இஸ்லாமிய மார்க்கச் சட்டங்கள் குறித்து அஷ்ஷெய்க் ஸைய்யத் சாபிக் என்ற மார்க்க அறிஞர், பிக்ஹுஸ் ஸுன்னா என்ற நூலை அரபு மொழியில் எழுதினார். இத்தகைய நூல் தமிழில் இல்லை என்ற குறையை நீக்கும் வகையில் அதை மவுலவி நூஹ் மஹ்ழரி மொழி பெயர்த்துள்ளார். திருக்குர் ஆன், நபிவழி மூலம் இஸ்லாமிய சட்ட விளக்கங்களை இந்த நூல் விளக்கமாக எடுத்துரைக்கின்றனது. முதல் பாகத்தில் தூய்மை பற்றியும், 2ம் பாகத்தில் தொழுகை பற்றியும் விரிவாக விளக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு இஸ்லாமியர்கள் இல்லத்திலும் இருக்க வேண்டிய நூல். நன்றி: தினத்தந்தி, 15/5/2013.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *