ஹிந்துத்துவ சிறுகதைகள்
ஹிந்துத்துவ சிறுகதைகள், அரவிந்தன் நீலகண்டன், தடம் பதிப்பகம், விலை 125ரூ.
காவிக்கதைகள் எந்த முகமூடியும் இல்லை, தலைப்பே சொல்லிவிடுகிறது இந்துத்துவா என்று. அதற்காகவே அரவிந்தன் நீலகண்டன் கவனம் பெறுகிறார். பிரசார சிறுகதைகளின் பல்வேறு சாத்தியங்களை அனாயாசமாகத் தொட்டுப் பார்க்கும் சிறுகதைகளின் தொகுப்பு என்கிறது பின்னட்டைக் குறிப்பு. உண்மைதான். வரலாற்றப்பின்னணியில் இந்து மதப் பெருமை பேசும் கதைகள் மிகவும் கவனமான இலக்கிய உத்திகளுடன் மொழியாளுமையுடன். அமுதம் என்கிற முதல் சிறுகதை நாயக்கர் காலத்தில் கோயில் ஒன்றில் நிகழ்ந்த சாதிக்கெதிரான தனிமனித கலகத்தைப் பேசுகிறது. பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிர் நிலையில் இருந்து பேசும் சிறுகதைகளும், இந்து தத்துவத்தை நிறுவும் அறிவியல் கதைகளுமாக இந்த தொகுப்பின் கதைகள் சிறுகதைகளுக்கான இலக்கணத்தை சிறப்பாகவே கையாண்டுள்ளன. -மதிமலர். நன்றி: அந்திமழை, 1/2/2016.