சம்ஸ்காரம்

சம்ஸ்காரம், கா.வி.ஸ்ரீநிவாஸமூர்த்தி, சந்தியா பதிப்பகம், பக்.176, விலை ரூ.175. நூலாசிரியரின் 15 சிறுகதைகளின் தொகுப்பு இந்தப் படைப்பு. வீதியோரம் கிடக்கும் குப்பைத் தொட்டியில் விழும் எச்சில் இலைக்காகப் போராடும் நாய்க்கும், பிச்சைக்காரனுக்குமான போராட்டம்தான் இப்படியும் சில ஆத்மாக்கள் சிறுகதையின் கரு. 1970 – களில் வெளியான நூலாசிரியரின் முதல் சிறுகதையான இது தினமணி கதிரில் பிரசுரமாகியுள்ளது. இன்பதுன்பங்களை ஒன்றெனக் கருதும் துறவிகளுக்கும் தாயின் மரணம் புறக்கணிக்க முடியாதது. உறவுகளைக் கடந்தவனுக்கு தாயின் மரணத்தில் பங்கேற்க சாஸ்திரங்கள் அனுமதிக்காவிட்டாலும், தாயின் இறுதிச் சடங்குகளைச் செய்வது அவனுக்குக் கடமையாகும். […]

Read more

விலங்குகளைப் பற்றிய வியப்பான செய்திகள்

விலங்குகளைப் பற்றிய வியப்பான செய்திகள், டி.என்.இமாஜான், மணிமேகலைப் பிரசுரம், விலை 70ரூ. விலங்குகள் பற்றி பலரும் பொதுவில் அறிந்திராத வியக்கத்தக்க தகவல்களின் துணுக்குத் தொகுப்பாக இந்த நூல் விளங்குகிறது. ஒட்டகங்கள் மாலை 6 மணிக்கு மேல் எதையும் சாப்பிடாது. வாழ்நாள் முழுவதும் நீரை அருந்தாத மிருகம் கங்காரு எலி. சிங்கத்தின் கர்ஜனை பல கிலோமீட்டர் தூரத்திற்குக் கேட்கும் என்பது போன்ற ஏராளமான தகவல்கள் இந்த நூலில் இருக்கின்றன. விலங்குகளின் சங்க காலப் பெயர்கள் விவரமும் தரப்பட்டுள்ளன. இடையிடையே காணப்படும் விலங்குகள் தொடர்பான நகைச்சுவை துணுக்குகள் […]

Read more

கனவும் வெற்றியும் பேசிக்கொண்டவை

கனவும் வெற்றியும் பேசிக்கொண்டவை, புதுயுகன், வானதி பதிப்பகம், விலை 200ரூ. உயர்கல்வித் துறையில் ஏற்படும் சவால்களை இளைஞர்கள் எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்பது சுவைபட கொடுக்கப்பட்டுள்ளது. கனவு, திறமை, பண்பு ஆகியவை சமமாக அமையப்பெற்றால் அதுவே வெற்றியின் அடையாளம் என்பதை ஆசிரியர் தெளிவுபடக்கூறி இருக்கிறார். இளைய சமுதாயத்துக்கு இந்த நூல் பயன் உள்ளதாக இருக்கும். நன்றி: தினத்தந்தி, 10/4/19. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://www.nhm.in/shop/1000000027747.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் […]

Read more

சைவத் தமிழ்

சைவத் தமிழ், தொகுப்பு பேராசிரியர் சண்முகசுந்தரம், காவ்யா, விலை 900ரூ. சைவ சித்தாந்தத்தின் சிறப்பு, அதன் வரலாறு ஆகியவற்றை ஆய்வு செய்த தமிழ் அறிஞர் அவ்வை துரைசாமிப் பிள்ளை எழுதிய நான்கு நூல்களின் தொகுப்பாக இந்த நூல் அமைந்து இருக்கிறது. தமிழ்ச் செல்வம், சைவ இலக்கிய வரலாறு, அவ்வைத் தமிழ், தமிழ்த் தாமரை ஆகிய தலைப்புகளில் அவ்வை துரைசாமிப் பிள்ளை ஆகிய நூல்கள் இதில் இடம் பெற்றுள்ளன. தமிழகத்தில் சைவத் தமிழ்த் தொண்டாற்றிய பல பெருமகனார்களைப் பற்றிய அரிய செய்திகளை இந்த நூல் தாங்கி […]

Read more

இருதய நோய்களும் இன்றைய மருத்துவமும்

இருதய நோய்களும் இன்றைய மருத்துவமும், த.கோ.சாந்திநாதன், உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம், விலை 180ரூ. இருதயம் சம்பந்தப்பட்ட அத்தனை தகவல்களையும் தாங்கி இருக்கும் இந்த நூலின் சிறப்பு, அவை அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் எளிமையான நடையில் எழுதப்பட்டு இருக்கிறது என்பதுதான். இதயத்தின் அமைப்பு, அது எவ்வாறு இயங்குகிறது, இதய நோய்களுக்கான புற அடையாளங்கள் என்ன, இதய நோய்களின் தன்மை, அவற்றை கண்டறிவதற்கான பொதுவான பரிசோதனைகள் எவை, இதய நோய் வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும் என்பது போன்ற விவரங்கள், விளக்கப்படங்களுடன் தரப்பட்டு இருப்பதால் அனைவரும் புரிந்து […]

Read more
1 6 7 8