தேவரடியார்

தேவரடியார், கலையே வாழ்வாக, அ.வெண்ணிலா, அகநி வெளியீடு, விலை 250ரூ. 1947-ம் ஆண்டு வரை தமிழகக் கோவில்களில் இறைவனுக்கு சேவை செய்வதற்காக நேர்ந்து விடப்பட்ட பெண்கள் பற்றிய ஆவணமாக இந்த நூல் திகழ்கிறது. பன்முகத் தன்மை கொண்ட எழுத்தாளர் அ.வெண்ணிலா, முனைவர் பட்டத்திற்காக தமிழக வரலாற்றை தீவிரமாக ஆய்வு செய்து, தேவதாசிகள் எனப்படும் தேவரடியார்கள் பற்றிய மிக விஸ்தாரமாக எழுதியுள்ள இந்த நூலில் வியப்பான பல தகவல்கள் கொட்டிக்கிடக்கின்றன. கோவில்களில் ஏராளமாகக் காணப்படும் கல்வெட்டுகள், செப்பேடுகள், பழங்கால இலக்கியங்கள் என்று அனைத்து விதமான தரவுகளில் […]

Read more

அள்ள அள்ள புதையல்

அள்ள அள்ள புதையல், ஆ.ஞானகுரு, தமிழ்வனம், விலை110ரூ. ஏராளமான பிரச்சினைகளுக்கு எளிய முறையில் தீர்வு காண்பது எப்படி என்பது நூற்றுக்கணக்கான துணுக்குச் செய்திகளாக இந்த நூலில் தரப்பட்டு இருக்கிறது. ஒவ்வொரு ராசிக்காரரும் எந்த கோவிலுக்குச் சென்று வழிபாடு நடத்த வேண்டும் என்பதும், செல்வம் பெருக, வழக்குகளில் வெற்றிபெற, கொடுத்த கடனை திரும்பப் பெற என்ன செய்யவேண்டும் என்பதும், பிரபஞ்சத்துடன் தொடர்புகொள்வது எப்படி என்பது குறித்தும் இந்த நூலில் தகவல்கள் தரப்பட்டுள்ளன. நன்றி: தினத்தந்தி 3/7/19, இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் […]

Read more

பாரதியின் செல்லம்மாள்

பாரதியின் செல்லம்மாள், புலவர் சி.வெய்கை முத்து, கற்பகம் புத்தகாலயம், பக். 176, விலை 150ரூ. நுாலாசிரியர் – கடையம் – சத்திரம் மேல்நிலைப் பள்ளியில், 32 ஆண்டுகள் தமிழாசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். ஓய்வுக்குப் பின், மகாகவி பாரதியாரின் துணைவியார் செல்லம்மாள் பிறந்த ஊரான கடையத்தில் ஆசிரியர் பணியாற்றிய போது, கிடைத்த அனுபவத்தாலும், அங்கு வாழ்ந்து வரும் பல சான்றோர்களிடத்தில் செல்லம்மாளைப் பற்றிக் கேட்டு அறிந்து கொண்டும் இந்நுாலைப் படைத்துள்ளார்! செல்லம்மாள் பாரதி (1890 – 1955) பர்த்தாவுக்கு ஏற்ற பதிவிரதை! மஹாகவியின் மஹா […]

Read more

பாதை எங்கும் பாடங்கள்

பாதை எங்கும் பாடங்கள், பேராசிரியர் க. ராமச்சந்திரன், நர்மதா பதிப்பகம், விலை 70ரூ. தினத்தந்தி இளைஞர் மலரில் பேராசிரியர் க. ராமச்சந்திரன் எழுதிய தன்னம்பிக்கை கட்டுரைகளின் தொகுப்பு. வாழ்க்கை ஒரு பயணம். அந்தப் பயணத்தில் வெற்றியும் இருக்கும், தோல்வியும் இருக்கும். வெற்றியிடம் இருந்து பெற்றுக் கொள்ள வேண்டும். தோல்வியிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும். “கற்றுக்கொள்ள பாதை எங்கும் பாடங்கள் உள்ளன” என்று கூறும் ஆசிரியர், “நதியின் ஒட்டமாய் உன் பயணம் இருக்கட்டும். “எந்த நதியும் தன் பயணத்தில் திரும்பி வர நினைப்பதில்லை. நதிக்கு […]

Read more

எனும்போதும் உனக்கு நன்றி

எனும்போதும் உனக்கு நன்றி, விஷால் ராஜா, ஜீவா படைப்பகம், விலை 99ரூ. உணர்விழைகளால் நூற்கப்பட்டவை இலங்கையின் மலையகத்தை இனி எஸ்தரின் கவிதைகளைக் கொண்டும் அடையாளப்படுத்தலாம். எஸ்தரின் முதல் தொகுப்பு இது. ‘விடுதலையை நினைத்தவனும் போராடியவனும் நிலமற்றுப்போன என் மலையக மூதாதையர்களுக்கும்’ என நூலின் சமர்ப்பணமே கவிதையாய் விரிகிறது. மெல்லிய உணர்விழைகளால் நூற்கப்பட்ட கவிதைகளைக் கொண்டிருக்கின்றன. காதல், காமம், சோகம், மகிழ்ச்சி, ஆற்றாமை, தவிப்பு, தோல்வி, பிரிவு, துரோகம், இயலாமை என மனிதருக்குள் ஊறும் உணர்வுகளை உருவி எடுத்துக் கவிதைகளாக்கியிருக்கிறார். மலையும் கடலும் வானமும் நதியும் […]

Read more

தமிழ் நூல் வரலாறு

தமிழ் நூல் வரலாறு, பாலூர் கண்ணப்ப முதலியார், பூம்புகார் பதிப்பகம், பக். 458, விலை 300ரூ. சங்க காலம் தொடங்கி தற்காலம் வரை வெளிவந்துள்ள தமிழ் நுால்களின் வரலாற்றையும், தமிழ் மக்களின் வரலாற்றையும், 74 தலைப்புகளில் இந்த நுால் விளக்குகிறது. நிகண்டுகளின் வரலாற்றையும், சைவ மடங்களின் தமிழ்த் தொண்டினையும், தனித்தனித் தலைப்புகளில் விளக்குவது இந்த நுாலின் சிறப்பு. தமிழ் இலக்கியம் படிக்கும் மாணவர்களுக்கும், தமிழ் இலக்கிய வரலாற்றை அறிந்து கொள்ள விரும்புவோருக்கும் மிகச்சிறந்த கையேடாக விளங்கும் இந்த நுால் மிக எளிய தமிழ் நடையில் […]

Read more

அவ்வையார் படைப்புக் களஞ்சியம்

அவ்வையார் படைப்புக் களஞ்சியம், முனைவர் தாயம்மாள் அறவாணன், தமிழ்கோட்டம் வெளியிடு, விலை 600ரூ. அன்புக்குரிய துணைவர் அறிஞர் அறவாணனுக்கு இந்த நுாலை காணிக்கையாக்கி, பெருமை சேர்த்திருக்கிறார் ஆசிரியர் தாயம்மாள், தமிழகத்தில், பல அவ்வையார்கள் விட்டு சென்ற அறநுால் பதிவுகள் அனைத்திற்கும் விளக்கமாக இந்த நுாலை எழுதியிருக்கிறார். அவ்வை என்ற சொல் வயதில் மூத்தவள், தமக்கை, பெண் துறவி ஆகியவற்றை குறிக்க வழங்குகிறது. சங்க கால அவ்வை தொடங்கி, பல அவ்வையார் வாழ்ந்திருக்கலாம் என்பதை ஆசிரியர் பதிவு செய்திருக்கிறார். காதல் பாடல்களை அவ்வை பாடியதாக குறிக்கும் […]

Read more

ஏழு ராஜாக்களின் தேசம்

ஏழு ராஜாக்களின் தேசம்,  அபிநயா ஸ்ரீகாந்த், யாவரும் பப்ளிஷர்ஸ், பக்.248, விலை ரூ.275. தூத்துக்குடியைச் சேர்ந்த நூலாசிரியர், கணவரின் வேலை காரணமாக ஐக்கிய அரபு நாட்டில் இரண்டு ஆண்டுகள் வாழும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறார். அந்த அனுபவங்களின் அடிப்படையில், துபாய், ஷார்ஜா, அபுதாபி, அஜ்மான், உம் அல் குவைன், புஜைரா, ராஸ் அல் கைமா என்ற ஏழு ஐக்கிய அரபு நாடுகளைப் பற்றிய அரிய தகவல்கள் அடங்கிய நூலை எழுதியிருக்கிறார். ஐக்கிய அரபு நாடுகளில் யார் வேண்டுமானாலும் தொழில் வர்த்தகத்தில் முதலீடு செய்யலாம்; ஆனால் அமீரகக் குடியுரிமை […]

Read more

பெரியசாமித்தூரன் நினைவுக் குறிப்புகள்

பெரியசாமித்தூரன் நினைவுக் குறிப்புகள், பதிப்பாசிரியர்: சிற்பி பாலசுப்பிரமணியம், சாகித்திய அகாதெமி, பக்.288, விலை ரூ.260. தமிழகம் நன்கறிந்த படைப்பாளியான பெரியசாமித்தூரன் நினைவுக் குறிப்புகளின் தொகுப்பு இந்நூல். பணம் சம்பாதித்து சுகமாக வாழ வேண்டும் என்று நினைக்காமல், தனக்குப் பிடித்த பணிகளைச் செய்து வாழ்ந்து முத்திரை பதித்து மறைந்தவர் பெரியசாமித்தூரன். கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே பித்தன் என்ற இதழை நடத்தியிருக்கிறார். பாரதியாரின் படைப்புகளை அவை வெளிவந்த ஆண்டு, மாதம், நாள் குறிப்புகளோடு 1953 ஆம் ஆண்டு வெளியிட்டிருக்கிறார். சிறுகதைகள், உளவியல் நூல்கள், நாடகங்கள், குழந்தை இலக்கியம், […]

Read more

திருவருட்குறள் (மூலமும் உரையும்)

திருவருட்குறள் (மூலமும் உரையும்),  ஆளரியார் என்ற ஆதிநரசிம்மன், மணிவாசகர் பதிப்பகம், பக்.799, விலை ரூ.750. கால வகையினான் புதியன புகுதல்என்பது இலக்கிய உலகில் தவிர்க்க முடியாத ஒன்று. திருவள்ளுவரின் திருக்குறளை அடியொற்றியும், அடித்தளமாகவும் கொண்டு இந்நூல் எழுதப்பட்டுள்ளது. முப்பால்களையும், 366 அதிகாரங்களையும் கொண்டு, இயலுக்கு பத்து குறள்களாக, அதிகாரப் பெயர்களில் சில மாற்றங்களுடன் அமைந்துள்ளது. கற்புடைமை (13) அதிகாரத்தில், கற்புடைய பொற்புடையார் நல்லுருச் செய்துலகு/ கற்கோட்டம் கட்டித் தொழும் என்றும், கணவன்-மனைவி கடன் எனக் கூறும் (22) அதிகாரத்தில், படிப்பும் பதவியும் பட்டமும் வாசல்/ படியிலே விட்டுள்வரல் […]

Read more
1 5 6 7 8