பிராந்தியம்

பிராந்தியம், நாராயணி கண்ணகி, தேனீர் பதிப்பகம், விலைரூ.55 அமரர் கல்கி நுாற்றாண்டு நாவல் போட்டியில் முதல் பரிசு பெற்ற குறுநாவல். காட்சி மயமாக எளிய நடையில் எழுதப்பட்டுள்ளது. உரையாடல்கள் மிக இயல்பாக உள்ளன. மதுக்கடை ஏலம் பற்றி பேசுகிறது. மிகவும் முதிர்ச்சியுடன் எழுதப்பட்டுள்ளது. அருமையாக தயாரிக்கப்பட்டுள்ளது நுால். நன்றி: தினமலர் 25/10/20 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

ஆளும் திறனை வளர்ப்பது எப்படி?

ஆளும் திறனை வளர்ப்பது எப்படி?, பொ.பொன்முருகன், இளையோர் இலக்கியம், விலைரூ.120. அன்றாட நடவடிக்கை, செயலை கூர்ந்து கவனிப்பதால் வாழ்க்கை பாதை மாறுமா… மாற்றலாம் என நிறுவ முயல்கிறது இந்த நுால். வெறுப்பை துறந்து, வெற்றிப் படிகளில் ஏற வைக்கும் மந்திரங்களை விளக்குகிறது. ஈடுபாட்டுடன் வாழ்ந்து, அன்றாட நிகழ்வு களை அணுக கற்றுத்தருகிறது. புரியும் வகை விளக்கப்படங்களுடன் மிக எளிய மொழியில் எழுதப்பட்டுள்ளது. குறுந்தலைப்புகளில், தகவல்கள் தொகுத்து கூறப்பட்டுள்ளன. சிறு செயல்களை கவனிப்பதால், பெரிய மாற்றங்கள் நிகழும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. எண்ணம், சொல், செயல், […]

Read more

சேது காப்பியம் – 10

சேது காப்பியம் – 10,  இயற்கை வியப்பார் எழுச்சிக் காண்டம், வா.மு.சேதுராமன், கவியரசன் பதிப்பகம், விலைரூ.700 மரபுக்கவிஞர் வா.மு.சேதுராமன், சேது காப்பியத்தை, 75ம் வயதில் தொடங்கி, 84ம் வயதில், 10ம் காண்டத்தை படைத்துள்ளார். காப்பியத்தின் சுருக்கத்தை உரைநடையில் வழங்கியுள்ளார். இந்த உரைநடையைப் படிக்கத் தொடங்கினால், காப்பியத்தை படிக்காமல் விடமாட்டார்கள்.கவிதைப் பயண வரலாற்றுடன் அந்நாட்டு வளங்களையும் அறிந்து கொள்ள முடிகிறது. தமிழ் மொழியைச் செம்மொழியாக அறிவிப்பதற்காகப் புதுடில்லியில் நடைபெற்ற போராட்ட அனுபவங்களையும் குமரி முனையில் அய்யன் திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்ட அனுபவங்களையும் எளிய கவிதையில் வடித்துள்ளார். […]

Read more

மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் தல வரலாறு

மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் தல வரலாறு, வெளியீடு: அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில், விலைரூ.50 திருக்கோவில் வெளியீடாக வந்துள்ள நுால். மதுரை, மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோவில் தல வரலாறு பதிப்பிக்கப்பட்டுள்ளது. காப்பில் துவங்குகிறது. கால வரிசைப்படி வரலாற்று தகவல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. பாண்டியர் ஆட்சியில் துவங்கி நாயக்க மன்னர்கள் ஆட்சி வரை உள்ளது.கோவிலில் வழிபடும் முறை, தினசரி பூஜை விபரங்கள் விரிவாக தரப்பட்டுள்ளது. திருவிழாக்கள், உப கோவில் விபரங்கள், கோவில் அமைப்பு முறை, நடந்துள்ள திருப்பணிகள் போன்ற விபரங்களும் கூறப்பட்டுள்ளன.தலக்குறிப்பில், இலக்கியம், கல்வெட்டு, ஓவிய, சிற்பங்கள் […]

Read more

அழகன் முருகன்

அழகன் முருகன், டாக்டர் லட்சுமி ராஜரத்தினம், தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், விலைரூ.90  பக்தர்களுக்கு அருளும் பண்பாளன்… பார் போற்றும் தயாளன்… பக்தர்களின் துயர் தீர்க்க பறந்தோடி வரும் மயிலோன் அழகன் முருகனைப்பற்றி ஆயிரம் பேர் பாடினாலும் தீராது.சொல்ல சொல்ல இனிக்கும் முருகன் திருவிளையாடலை, அழகு தமிழில் விளக்கியுள்ளார் ஆசிரியர் லட்சுமி ராஜரத்தினம். பிள்ளைத்தமிழ் பாடிய பகழிக்கூத்தருக்கு கழுத்தணி வழங்கி, அவரின் திறமையை உலகுக்கு வெளிப்படுத்திய முருகன், பிரணவ மந்திரத்திற்கு பொருள் தெரியாத பிரம்மனுக்கு தண்டனை வழங்கி, அவரின் கர்வத்தை அழித்தொழித்தான். வித்வத் […]

Read more

செய்தி எழுதப் பழகுவோம்

செய்தி எழுதப் பழகுவோம், ஆ.குணசீலன், வசந்தா பிரசுரம், விலைரூ.90 பத்திரிகைகளுக்கு செய்தி எழுதுவது குறித்து அனுபவ அடிப்படையில் எழுதப்பட்டுள்ள நுால். பத்து தலைப்புகளில் சிறு கட்டுரைகளை உள்ளடக்கியது. ஈர்க்கும் வகையில் எளிமையாக செய்திகள் எழுதுவது பற்றி விளக்குகிறது. பத்திரிகைத்துறையில் பணியாற்ற விரும்புவோருக்கு உதவும். நன்றி: தினமலர், 18/10/20. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

திருவாசகப் பயணம் முதல் சுற்று

திருவாசகப் பயணம் முதல் சுற்று, அ.நாகலிங்கம், ஆசிரியர் வெளியீடு, விலைரூ.80 சிவ புராணம், கீர்த்தித்திரு அகவல் பிரிவுகளுக்கு பாடலைப் பிரித்து, அரும்சொல் விளக்கம் தந்து விளக்கவுரையை குறிப்புகளுடன் எழுதி உள்ளார். நால்வர் நான்மணி மாலையிலிருந்து மாணிக்கவாசகர் பற்றிய 10 பாடல்களை வெளியிட்டதோடு, அவர் வரலாறும் பதிவு செய்யப்பட்டு உள்ளது. மாணிக்கவாசகர் குறிப்பிடும் பிறப்புகளை இரு வகைகளாக விளக்கியிருப்பது அருமை. ஓரறிவு உயிர் முதல் ஆறறிவு உயிர் வரை வகைப்படுத்தி தரப்பட்டுள்ளன.திருவாசக உரைகளை ஆய்ந்து அரிய செம்பொருள் விளக்கம் தந்துள்ளார். கீர்த்தித் திரு அகவல் பகுதியில் […]

Read more

உங்கள் சுட்டிக் குழந்தைகளுக்கு சுவையான குட்டிக் கதைகள் – 75

உங்கள் சுட்டிக் குழந்தைகளுக்கு சுவையான குட்டிக் கதைகள் – 75, கமலா கந்தசாமி, நர்மதா பதிப்பகம், விலைரூ.230 குழந்தைகளுக்கான வீர, தீர கதைகள் அடங்கிய தொகுப்பு நுால். தமிழ் பேராய விருது பெற்றது. படுக்கையறையில் குழந்தைகளை குதுாகலமூட்ட, சொல்லும் வகையில் எழுதப்பட்டுள்ளது. பாட்டி வடை சுட்ட கதையில் துவங்கி, அரசரும் பன்றியும் என்ற குறுங்கதையுடன் முடிகிறது. ஏற்கனவே கேட்ட கதைகள் எளிய நடையில் எழுதப்பட்டுள்ளன. தமிழ் பேராய விருது பெற்று நுாலாக்கப்பட்டுள்ளது. நன்றி: தினமலர், 25/10/20. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://dialforbooks.in/product/1000000006539_/ இந்தப் புத்தகத்தை […]

Read more

தர்மேந்திரா மக்கள் கலைஞன்

தர்மேந்திரா மக்கள் கலைஞன், அப்சல், இருவாட்சி, விலைரூ.200 ஹிந்தி நடிகர் தர்மேந்திரா பற்றிய நுால். அவருடன் பணியாற்றிய, நடிகர்கள், நடிகையர், இயக்குனர்கள்,பாடலாசிரியர்கள், பாடகர்கள் குறித்த அரிய தகவல்கள் அடங்கியுள்ளன.தர்மேந்திரா நடித்த, 283 திரைப்படங்களின் பட்டியல், கவுரவ வேடத்தில் நடித்த படங்கள்,ஊதியம் வாங்காமல் நடித்தவை, விருது பெற்றவை, சிறந்த, 13 படங்கள், அதன் புகைப்படங்கள், இந்நுாலில் இடம் பெற்றுள்ளன. மேலும், எந்தெந்த தமிழ் படங்கள், ஹிந்தியில் ‘ரிமேக்’ செய்து, அதில் தர்மேந்திரா நடித்துள்ளார், இவருடன் நடித்த தமிழ் நடிகர்கள், நடிகையர், தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்தும் விவரிக்கிறது. […]

Read more

பாம்பன் சுவாமிகள்

பாம்பன் சுவாமிகள், பா.சு.ரமணன், தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், விலைரூ.16\ ராமநாதபுரம் பாம்பனில் அப்பாபுவாக பிறந்தவர் பாம்பன் சுவாமிகளாக, குமரகுருதாச சுவாமிகளாக அறியப்பட்டார். முருகனை முழுமுதற்கடவுளாக கொண்டு தமிழகம் முழுக்க யாத்திரை சென்றவர். கற்றறிந்ததை அறிவால் பெற்றறிந்ததை சண்முக கவசமாக, குமாரஸ்தவமாக மக்களுக்கு அருளியவர்.அந்த மகானின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் நுால் இது. வாழ்வின் பெரும்பகுதியை இறை அனுபவத்திற்காக, மக்களின் இறை வாழ்விற்காக செலவிட்டவர் பாம்பன் சுவாமிகள். இல்லறத்தில் இருந்து நிரந்தர துறவறம் செல்ல நினைத்தவர் முருகனே பழநிக்கு அழைத்தாரா என நண்பர் […]

Read more
1 2 3