விஜயநகரப் பேரரசு

விஜயநகரப் பேரரசு, கா.அப்பாதுரை, ஸ்ரீ செண்பகா பதிப்பகம், விலைரூ.200. இந்தியாவின் தெற்கு பகுதியிலிருந்த விஜயநகரப் பேரரசின் சமூக அரசியல், பொருளாதார வளர்ச்சி எழுதப்பட்டுள்ளது. வரலாற்று நாவல் போன்றது எனலாம். பண்டைய வரலாற்று சிறப்புகளை அறிந்து கொள்ள, இத்தகைய நுால்கள் மிகவும் பயன்படும். விஜயநகர மன்னர்கள், நாயக்க அரசர்களோடு கொண்ட தொடர்புகள் மற்றும் மற்ற மன்னர்கள், சிற்றரசர்கள் பற்றியும் விளக்கமாக கூறப்பட்டுள்ளது. விஜயநகரப் பேரரசு ஆண்டதாக கூறியுள்ள, 14 – 17ம் நுாற்றாண்டு வரை உள்ள தமிழக வரலாறு கோர்வையாக சொல்லப்பட்டுள்ளது. – என்.எஸ்., நன்றி: […]

Read more

உலகை உலுக்கும் கொரோனாவும் மறைமுக நன்மைகளும்

உலகை உலுக்கும் கொரோனாவும் மறைமுக நன்மைகளும், பு.சி. இரத்தினம், மணிமேகலை பிரசுரம், விலைரூ.100. கொரோனா என்ற தீநுண்மி நோயால் உலகம் முழுதும் ஏற்பட்டுள்ள மாற்றங்களை ஆராய்ந்து எழுதப்பட்டுள்ள நுால். ஆண்டு தோறும், 30 நாட்கள் கட்டாய ஊரடங்கு அமல் படுத்த வேண்டும் என்ற பரிந்துரையுடன் முடித்துள்ளார். கொரோனா அச்சம் ஏற்பட்டதில் இருந்து, நடந்த எல்லா மாற்றங்களையும் தொகுத்துள்ளார். படங்களையும் இணைத்துள்ளார். மனிதாபிமானம் மற்றும் இயற்கை ஆர்வம் சார்ந்த கண்ணோட்டம் புத்தகம் முழுதும் உள்ளது. ஆய்வு பார்வையுடன் எழுதப்பட்டுள்ளது. தொற்று நோய், உலகில் ஏற்படுத்திய மாற்றங்களை […]

Read more

நரேந்திர மோடி என்னும் நான்

நரேந்திர மோடி என்னும் நான்…, மானோஸ், குமரன் பதிப்பகம், விலைரூ.400 பிரதமர் மோடி, இரண்டாவது முறையாக தேர்தலில் வெற்றிப் பெற்று, பிரதமர் ஆனதை முன்னிட்டு, அவரது சாதனை பயணத்தை விரிவாக எழுதியுள்ளார். மோடியின் தேர்தல் வெற்றியை தொடர்ந்து, இந்தியாவில் ஏற்பட்ட அரசியல் மாற்றம், அவரது அடுத்தடுத்த திட்டங்கள், வெளிநாட்டு பயணங்களின் நோக்கம், ஊழலுக்கு எதிரான செயல்பாடுகள் மற்றும் நாட்டை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்வதற்கான அவரது திட்டங்கள் போன்றவற்றை விரிவாக, 125 அத்தியாயங்களில் எழுதியுள்ளார். – என்.எஸ்., நன்றி: தினமலர், 23/8/20. இந்தப் புத்தகத்தை […]

Read more

உடல் நலம் காக்கும் எளிய அக்குபிரஷர் முறைகள்

உடல் நலம் காக்கும் எளிய அக்குபிரஷர் முறைகள், பி.சி.கணேசன், நர்மதா பதிப்பகம், விலைரூ.80 நோயின்றி வாழ வழியும், நோய் வந்தால் நீக்க எளிய வழிமுறைகளும் கூறப்பட்டு உள்ளன. மனித உடல் ஓர் இயற்கை அற்புதம் என்று துவங்கி, 14 தலைப்புகளில் பயனுள்ள கருத்துகள் இடம் பெற்றுள்ளன. பஞ்ச பூதங்களாகிய நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் இவற்றுடன் உடலுக்கு உள்ள தொடர்பை அழகாகக் கூறியுள்ளார். உடலில் ஆறு நரம்பு மையங்களை, ஏழு பிரிவுகளாக கூறப்பட்டுள்ளது. அக்கு பங்சர், அக்குபிரஷருக்கு இடையே உள்ள வேறுபாடுகளையும் கூறுகிறது. […]

Read more

எத்தனை கோடி உயிர்கள் எனக்குள்

எத்தனை கோடி உயிர்கள் எனக்குள், க.மணி, அபயம் பப்ளிஷர்ஸ், விலைரூ.120. கண்ணுக்கு புலப்படாத பாக்டீரியா என்ற நுண்ணுயிரி பற்றி விளக்கும் அறிவியல் நுால். எட்டு தலைப்புகளில் உள்ளது. ‘அறிவு என்பது அறியாமையை மேலும் வெளிப்படுத்துவது’ என்ற பொன்மொழியுடன் துவங்குகிறது. மனித உடலில் உள்ள செல்களை விட, உடலில் வாழும் நுண்ணுயிரிகள் பல மடங்கு அதிகம் என்ற வியப்பூட்டும் உண்மை விளக்கப்பட்டுள்ளது. புத்தகத்தில், ‘உடலே ஒரு வனம்’ என்ற பகுதியிலிருந்து…உடலில் எத்தனை வகை பாக்டீரியாக்கள் வசிக்கின்றன என்பதைக் கணக்கிட முடியவில்லை. ஒன்றுக்கு பத்து என்ற விகிதத்தில் […]

Read more

மணல் உரையாடல்

மணல் உரையாடல், கவிதைகள், இசாக், தமிழ் அலை, விலை 150ரூ. பொருளின் பொருள்பார்த்த முகமெல்லாம் வேற்று முகமாக இருக்கும் வெளிநாட்டுப் பணியில்… தயக்கங்களுடன் போராடிய நினைவுகளின் தொகுப்பாக மணல் உரையாடல் கவிதைகளை எழுதியிருக்கிறார் கவிஞர் இசாக். நாடு அந்நியமாதல், மொழி அந்நியமாதல், உறவுகள் அந்நியமாதல், ஊர் அந்நியமாதல் என்பதெல்லாம் மானுட வாழ்வின் பெரிய துயரங்கள்தான் என்றாலும், ஒருவருக்கு தன் சொந்தவீடே அந்நியமாகிப் போகும் கொடிய துயரம் போன்ற பிரிதல்களில் ஏற்பட்டு விடுவதை எளிய சொற்களால் “கனவுகளில் வந்து கொஞ்சுகிற முகத்தைக் காணப் போகிற மகிழ்ச்சிஎனக்குள்ரசித்து […]

Read more

தாளடி

தாளடி, சீனிவாசன் நடராஜன், தேநீர் பதிப்பகம், விலை 230ரூ. நீரும் நெருப்பும் சம்பா, தாளடி, குறுவை என முப்போகம் விளைவது தஞ்சை மண். இங்கு 1960களின் இறுதியில் ஏற்பட்ட மாறுதல்கள், இடது சாரி இயக்கங்கள், திராவிட இயக்க எழுச்சி, விவசாயத்தில் ஏற்பட்ட மாறுதல்கள் ஆகியவற்றின் பின்னணியில் குறிப்பாக கீழத் தஞ்சையை முன்வைத்து தாளடி என்று இந்த நாவலை எழுதி இருக்கிறார் சீனிவாசன் நடராஜன். இப்பகுதியின் வாழ்வோடு தொடர்புடையவர் ஆசிரியர் என்பதால் வரிக்கு வரி நெல்வயலின் வாசமும், குளங்கள், ஆறுகள், செடிகொடிகள், மாட்டு வண்டிகள் ஆகியவற்றின் […]

Read more

அறுவகை இலக்கணச் சிறப்புகள்

அறுவகை இலக்கணச் சிறப்புகள், த.முத்தமிழ்,காவ்யா, விலைரூ.220. கால மாற்றங்களால் மொழி வழக்குகள் மாறும்போது இலக்கியங்களில் மட்டுமன்றி, இலக்கணங்களிலும் மாற்றுப்பார்வைகள் தோன்றி வருகின்றன. எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என ஐந்திலக்கணங்களுடன் புலமையிலக்கணத்தையும் தந்த, வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகளின் அறுவகை இலக்கண நுாலில் உள்ள மாறுபட்ட பார்வைகளை ஆய்ந்து விளக்கியுள்ளார் நுாலாசிரியர். எழுத்திலக்கணத்தின் உருவோசையியல்பில் அலகெழுத்து, கூட்டெழுத்து எனும் இரண்டை இணைத்து, குறிப்பெழுத்தை இலக்கணத்தில் சேர்த்து, பிற இலக்கணிகள் விரித்துக் கூறாத அலகுகள், எழுத்து வடிவங்கள், கூட்டெழுத்து வரி வடிவங்கள், எழுதும் முறைகள் படைத்திருப்பதை […]

Read more

தற்கால சிறார் எழுத்தாளர்கள்

தற்கால சிறார் எழுத்தாளர்கள், ஆர்.வி. பதி, நிவேதா பதிப்பகம், விலைரூ.250 சிறுவர் இலக்கியம் படைத்த எழுத்தாளர்களின் சுருக்கமான வரலாறு. தமிழகம் மட்டுமன்றிப்பிற மாநிலங்களில் வாழும் குழந்தை எழுத்தாளர்கள், 101 பேரை தேர்ந்தெடுத்து அவர்களின் பங்களிப்பைச் சுருங்கச் சொல்கிறது. இன்றைய குழந்தை எழுத்தாளர்களின் வாழ்க்கை வரலாற்றை உரைக்கிறது. அவர்களின் பிற படைப்புகளையும் தெரிவிக்கிறது. இலக்கியத்திற்குப் பங்காற்றிவரும் தகவல்களையும் எடுத்துரைக்கிறது. எழுத்தாளர்களின் பணியை ஓரிரு பக்கங்களில் தகவலாகத் தந்திருப்பதுடன் முகவரியையும் தந்திருப்பது பாராட்டுக்குரியது. குழந்தை இலக்கியத்திற்கான கையேடாகவும், தகவல் ஆவணமாகவும் திகழ்கிறது இந்நுால். – ராம.குருநாதன் நன்றி: […]

Read more

இனியாவது நம்புங்களேன்!

இனியாவது நம்புங்களேன்!, அ.திருமூர்த்தி, மணிமேகலை பிரசுரம், விலைரூ.200. அமெரிக்க குடியுரிமைக்காக தந்தையின் இறுதிச்சடங்கைப்புறக்கணிக்கும் மகனை, ‘டாலர் கனவு’ காண்பவனாகவும், விதவை யான பின் பழைய காதலனே ஏற்றுக்கொள்வதை, ‘புதிய வாழ்க்கையாகவும், பட்டா வாங்க படும்பாட்டை, ‘அடுத்த கலெக்டர் ரெடியா’ கதையிலும், ‘பிச்சைக்காரி’ கதையில் பெண்ணின் நேர்மையும் பதிவாகியுள்ளன.பொழுது போக்கு அம்சங்கள் நிறைந்த நுால். – பின்னலுாரான் நன்றி: தினமலர், 18/10/20. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more
1 2 3