63 நாயன்மார்கள் புராணம்
63 நாயன்மார்கள் புராணம், ச. கோபால கிருஷ்ணன், சுரா பதிப்பகம், சென்னை – 40, பக்கங்கள் 232, விலை 90ரூ.
புராணம் என்னும் சொல்லுக்கு பழைய வரலாறு என்பது பொருள். சைவ அடியார்களான, 63 நாயன்மார்களின் வரலாற்றினை, இந்த நூல் தெரிவிக்கிறது. தொகையடியார்கள் ஒன்பதுபேர், சேக்கிழார், நம்பியாண்டார் நம்பி ஆகியோரின் வரலாற்றினையும் சேர்த்துத் தந்துள்ளமையால், முழுமைத்தன்மை பெற்றுள்ளது. பன்னிரு திருமுறை எவை என்னும் விளக்கம், நடுநாட்டு நாயன்மார், பாண்டிய நாட்டு நாயன்மார் என, பிரித்து தந்துள்ள வகைமை, எளிய நடை என ஆய்வு முறையில் அமைந்துள்ளது நூல்.நாயன்மார்களின் பெயர், அவர்கள் பிறந்த குலம், பிறந்த ஊர், பிறந்த நாடு என, பட்டியலிட்டிருப்பது ஆசிரியரின் அரிய முயற்சிக்குச் சான்றளிக்கிறது. – முகிலை இராசபாண்டியன். நன்றி – தினமலர், 10 பிப்ரவரி 2013.