கொடைக்கானல் மர்மம்

கொடைக்கானல் மர்மம், ஆர்னிகா நாசர், நேஷனல் பப்ளிஷர்ஸ், சென்னை 17, பக்கங்கள் 104, விலை 55ரூ.

மேலை நாடுகளில், சிறுவர் இலக்கியம் வளர்ந்திருக்கும் அளவில், தமிழில் இல்லையே என்பது பலரின் ஆதங்கம். அந்தக் குறையை போக்குவதுபோல் வந்திருக்கிறது இந்தப் புத்தகம். பொதுவாகவே, சிறுவர்களுக்கு சாகசம், மர்மம், துப்பறிதல் போன்ற நூல்களில் ஈர்ப்பு அதிகம். அக்கா மீனா(11), தம்பி சுரேஷ் (9), இருவரும் அடிக்கும் லூட்டி, இவர்களின் அப்பா காட்டிலாகா அதிகாரி, கொடைக்கானலுக்கு மாற்றப்பட்டு, அங்கு பெருமாள் மலை என்னும் கிராமத்தில் இருக்கும், மர வீட்டிற்கு வந்து சேர, ஆரம்பிக்கிற்து இந்த திகில் கதை. இறுதி வரை தொய்வில்லாமல் கதையை கொண்டு சென்றிருக்கிறார் ஆசிரியர். – சிவா. நன்றி – தினமலர், 10 பிப்ரவரி 2013.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *