பேராசிரியர் ஏசுதாசனின் என் நெஞ்சில் நின்றவை

என் நெஞ்சில் நின்றவை, முனைவர் ப.ச. ஏசுதாசன், தாசன் பதிப்பகம், சென்னை 63, விலை 125ரூ.

ஒரு சாமான்யனும், தன் வரலாற்றை பதிவு செய்யலாம் என்ற கருத்தில் தமிழ்ப் பேராசிரியரான ஆசிரியர் இந்த நூலை எழுதியிருக்கிறார். சிறந்த கல்லூரி ஆசிரியரான இவர், சில விஷயங்களைப் பதிவு செய்திருக்கிறார். அவற்றில் ஒரு பகுதி – எனக்கு சமயமும், தமிழும் இரு கண்களாகவே விளங்கின. ஒன்றைப் பெரிதும் விரும்பி, மற்றதைக் கைவிட்டதில்லை. பொருளாசை, பதவி ஆசை என்னை ஆட்கொண்டதில்லை… எனக்கு போலி முகமோ, பொய் முகமோ கிடையாது. பிறரை புகழ்ந்து பேசிப் பின் சொல்லும் நிலை எனக்குக் கிடையாது. அதனால், உலகப்பிரகாசமான பெரும் வெற்றிகளை நான் பெறவில்லை. இத்தகவல்கள், நிச்சயம் மற்ற ஆசிரியர்கள் எழுதத் தயங்கும் தகவல்கள் என்பதால், இந்த நூல் வித்தியாசமானது. நன்றி – தினமலர், 10 பிப்ரவரி 2013.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *