திருமந்திர நெறி

திருமந்திர நெறி, ஜி. வரதராஜன், பழனியப்பா பிரதர்ஸ், கோனார் மாளிகை, 25, பீட்டர்ஸ் சாலை, சென்னை 14, பக்கங்கள் 176, விலை 75ரூ

நெறி என்றால் சமயக் கொள்கைக்காகவோ, தனிமனித ஒழுக்கத்துக்காகவோ ஏற்படுத்தப்பட்ட விதி அல்லது முறை எனப்படும். திருமூலர் தாம் அருளிய திருமந்திரம் வாயிலாக இத்தகைய வழிமுறைகளை அருளிச் செய்துள்ளார். பன்னிரு திருமுறைகளுள் பத்தாம் திருமுறையாக உள்ளது திருமூலரின் திருமந்திரம்- திருமூலர் அருளிச்செய்த திருமந்திரம் தோத்திர நூலாகவும் சாத்திர நூலாகவும் திகழ்கிறது. எல்லா சமயங்களும் மதங்களும் இறைவனை அடைவதற்குரிய வழியாக அன்பையே வலியுறுத்திக் கூறி நெறிப்படுத்துகின்றன. அந்த வகையில் திருமந்திரம் சைவர்களுக்க முதன்மையானதாகத் திகழ்கிறது. ஒன்பது தந்திரங்களைக் கொண்டு மூவாயிரம் பாடல்களுடன் விளங்கும் திருமந்திரம் கடவுள் தத்துவம், சிவபெருமானின் அருள் செயல்கள், சிவனின் வீரதீரச் செயல்கள், ஞானம், தவம், யோகம், மந்திரம், அறவாழ்வு போன்ற அனைத்தையும் கூறுகிறது. குறிப்பாக சைவ சித்தாந்தத் தத்துவங்கள் விரிவாகக் கூறப்பட்டுள்ளன. முழுவதும் படிக்க இயலாதவர்களுக்காக திருமந்திரத்தைச் சாறுபிழிந்து தந்திருக்கிறார் நூலாசிரியர். இன்றைய சமுதாயம் பயன்பெறும் வகையில் திருமந்திரம் இன்றைய சமுதாயம் என்ற 13வது தலைப்பில் அமைந்த கட்டுரை வெகு சிறப்பாக விளக்குகிறது. இதில் செக்ஸ் கல்வி, கணவன் மனைவி தாம்பத்தியம், கரு உற்பத்தி, குழந்தை பிறப்பு, குடும்பக்கட்டுப்பாடு ஆகிய இன்றைக்கும் என்றைக்கும் பயன்படக்கூடிய அனைத்து விவரங்களும் அடங்கியுள்ளன. சிறந்த திருமூலக் கருவூலம். நன்றி: தினத்தந்தி, 19 மார்ச் 2012.  

—–

 

சோனியா காந்தி, பூம்புகார் பதிப்பகம், 127, பிரகாசம் சாலை, சென்னை 108, விலை 185ரூ.

அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியின் வாழ்க்கை வரலாற்றைக் கூறும் நூல். ரஷீத் கித்வாய் ஆங்கிலத்தில் எழுதிய நூலை ஏ.பொன்னுசாமி தமிழில் மொழி பெயர்த்துள்ளார். இத்தாலியில் உள்ள அர்பாஸானோவில் பிறந்து, ராஜீவ் காந்தியைக் காதலித்து கரம் பிடித்து இந்தியாவின் மருமகளாக வாழ்க்கையைத் தொடங்கி கணவரின் மரணத்திற்குப் பிறகு காங்கிரசின் எதிர்காலம் கேள்விக்குறியான நிலையில் காங்கிரஸ் கட்சியின் தலைவரானார் சோனியா காந்தி. தொடர்ந்து இரண்டு பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி வாகை சூடி இந்திய அரசியல் வானில் நம்பிக்கை நட்சத்திரமாகத் திகழும் சோனியா காந்தி சந்தித்த சோகங்கள், தடைகள், சாதனைகள், காங்கிரஸ் வென்ற போதும் பிரதமர் பதவியை உதறிய தியாகம், எதிர்க்கட்சித் தலைவர்களுடன் இணக்கமான அணுகுமுறை ஆகியவை குறித்து விரிவாகவும், சுவையாகவும் இந்த நூலில் சொல்லப்பட்டிருக்கிறது. நன்றி: தினத்தந்தி , 07 மார்ச் 2012.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *