இந்தியாவின் விடிவெள்ளி சுவாமி விவேகானந்தர்
இந்தியாவின் விடிவெள்ளி சுவாமி விவேகானந்தர், நெல்லை விவேகானந்தா, வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, தி. நகர், சென்னை – 600 017, பக்கம்: 252, விலை: ரூ. 125. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-546-3.html
இந்து மதத்தின் பெருமையை, உலக அரங்கில் நிலை நாட்டியவர் விவேகானந்தர். எத்தனை முறை படித்தாலும், அலுக்காது அவரது வாழ்க்கை வரலாறு. இந்நூலாசிரியர் சுவாமிஜியின் வாழ்க்கையில் முக்கியமான சம்பவங்கலை, 43 தலைப்புகளில் சுருக்கமாக, ஆனால் சுவைபட எழுதியுள்ளார். சுவாரஸ்யமாகப் படைத்திருக்கிறார். – கேசி.
—
மெளனியின் மறுபக்கம், ஜே. வி. நாதன். விகடன் பிரசுரம், விலை: ரூ. 75. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-837-1.html
சிறுகதைகள் படைப்பதில் வாசகர்களுக்கு புது அனுபவம் தருபவராக இருந்தவர் மௌனி. அவருடன் பழகிய ஆசிரியர் மௌனியின் அகத்தை, இதில் பதிவு செய்கிறார். கதைவாசிப்பில், அக்கறை கொண்ட அனைவரும் ரசிக்கும் படைப்பு.
—
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாமம், சர்வமங்கள ஸ்ரீ ராஜராஜேஸ்வரி ஆச்ரமம், டி. ஜி. நகர், நங்கநல்லூர், சென்னை – 600 061.
பகவான் விஷ்ணுவின் திருநாமங்களுக்கு எளியவகையில் பொருள், அதற்கு ஆதாரமாக ஆழ்வார்கள் அருளிய பாடல் மேற்கோளாகத் தரப்பட்டிருக்கின்றன. பக்தர்கள் விரும்பும் நூல்.
—
பவர் பத்திரங்கள் எழுதுவது எப்படி?, வி. ஆர். எஸ். ராமஜோதி, ஆர்த்தி பப்ளிகேஷன்ஸ், மதுரை – 625 009, பக்கம்: 140, விலை: ரூ. 100.
சொத்து வாங்குவோர் எளிதாக பின்பற்றும் வகையில் ஆவணங்கள் மாதிரியுடன் கொண்ட நூல். நன்றி: தினமலர் (31.3.2013).