கம்பன் பிறந்த தமிழ்நாடு
இவர்களும் நானும், ஏகம் பதிப்பகம், 3, பிள்ளையார் கோவில் தெரு, இரண்டாம் சந்து, முதல் மாடி, திருவல்லிக்கேணி, சென்னை – 5, விலை: ரூ. 70.
தன் மனம் கவர்ந்தவர்கள், சாதனையாளர்கள் பற்றி கவிஞர் ஆண்டாள் பிரியதர்ஷினி எழுதிய புத்தகம். நமக்கு அறிமுகம் இல்லாதவர்கள் பற்றி எழுதியிருப்பதைக் கூட ரசித்துப் படிக்க முடிகிறது என்றால், அதற்குக் காரணம் ஆண்டாள் பிரியதர்ஷினியின் சிறப்பான நடை.
—
பரமரகசியம் (பாகம் 1), ராஜா சுப்பிரமணியன், சநாதநா பதிப்பகம், 142, முதல் மாடி, கிரீன்வேஸ் சாலை, ராஜா அண்ணாமலைபுரம், சென்னை – 28, விலை: ரூ. 200.
பிரம்ம சூத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு வேதங்களின் சாரத்தைத் தரும் நூல். ஆன்மிகவாதிகளுக்கு பயன் தரும் புத்தகம்.
—
கம்பன் பிறந்த தமிழ்நாடு, முனைவர் சரசுவதி இராமநாதன், வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, தி. நகர், சென்னை – 17, விலை: ரூ. 45.
கம்பனைப்பற்றியும், தமிழ்நாட்டைப் பற்றியும் புகழும் சிறுநூல், ஆசிரியரின் சொற்பொழிவே நூல் வடிவமாக வந்துள்ளது.
—
அவள் வரும் நேரம், அன்பு முருகசாமி. வி, வாசகன் பதிப்பகம், 11 / 96, சங்கிலி ஆசாரி நகர், சன்னியாசி குண்டு, சேலம் – 636015, விலை: ரூ. 40.
தன் ஆருயிர்க் காதலியிடம் தன் இதயத்தைத் திறந்து காட்டி, உணர்ச்சி பொங்க காதலை வெளிப்படுத்துவது போல் அமைந்த கவிதைகள் ஒவ்வொரு கவிதையும் ஜீவனுடனும் உயிர்த்துடிப்புடனும் விளங்குகின்றது. நன்றி: தினத்தந்தி (3.4.2013).