தென்னாட்டு சிவத்தலங்கள் (தமிழகம்)

தென்னாட்டு சிவத்தலங்கள் (தமிழகம்), ப. முத்துக்குமாரசாமி, பழனியப்பா பிரதர்ஸ், 25, பீட்டர்ஸ் சாலை, சென்னை 14, விலை 235ரூ.

இந்த நூல் இரண்டாம் தொகுதியாக மலர்ந்திருக்கிறது. தமிழகத்தில் 274 கோவில்களைப் பற்றிய ஆதாரபூர்வ தகவல்கள், அமைவிடம், நால்வர் பாடியதெனில், அப்பாடல் என்ற பன்முகத் தகவல்களுடன், கோவிலின் படமும் தரப்பட்டிருப்பது இந்த நூலின் சிறப்பாகும். மேலும், திருத்தலங்களின் பழைய தமிழ்ப் பெயருடன் அதன் விளக்கமும் தரப்பட்டிருக்கின்றன. சைவ நெறியில் தோய்ந்து வாழும் அனைவரும் விரும்பும் நூல்.  

—-

 

தென்னாட்டுச் செல்வங்கள் (பாகம்2), ஓவியர் சில்பி, விகடன் பிரசுரம், சென்னை 600002, பக்க. 896, விலை 650ரூ.

தென்னாட்டுத் திருத்தலங்கள் பலவற்றில் இருக்கும் தெய்வீகச் சிற்பங்களை மாபெரும் ஓவியர் சில்பி வரைந்துள்ள சித்திரங்கள் அடங்கிய ஆன்மிகப் பொக்கிஷம். வண்ணத்தாள்கள் கெட்டி அட்டை. -எஸ். குரு.  

—-

 

கண்டறியாதன கண்டேன், தி. சுபாஷிணி, விலை 70ரூ.

தமிழ்ச்சுவை அறிய ரசிகமணி பெருமகனாரை அறிய வேண்டும். அவர் தமிழ்க்கடல், ரசிகமணியுடன் தமிழ் அமுதம் பருகி வாழும் வித்துவான் ல. சண்முகசுந்தரத்தை பாராட்டும் விதமாக அமைந்த நூல் இது. தமிழ் நயத்தில் எழுதப்பட்ட கட்டுரைகள் உள்ளன. மணிவாசகரும், குற்றாலக் குறவஞ்சி ஆசிரியர் திரிகூடராசப்ப கவிராயரும், குற்றாலத்தை ரசித்தவிதத்தை காட்டும் கட்டுரை ஒன்றே இந்த நூல் நயத்தை வாசகர்களுக்கு வெளிப்படுத்தும். நன்றி: தினமலர் 21/4/2013.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *