தூக்கணாங்குருவி
தூக்கணாங்குருவி, தங்கமணி, மணிவாசகர் பதிப்பகம், 31, சிங்கர் தெரு, பாரிமுனை, சென்னை 108, பக். 64, விலை 20ரூ.
அந்த நாட்களில் சிறந்த குழந்தை எழுத்தாளராகத் திகழ்ந்தவர் பல விருகளைப் பெற்றவர். அன்னாரின் அக்காலச் சிறுவர் முழு நாவல் படங்களுடன் இடம்பெற்றுள்ளது. சிறுவர், சிறுமியர் படித்து மகிழ பயனுள்ள நூல். -எஸ். திருமலை.
—-
நீதி நெறி விளக்கம், முனைவர் இரா. குமரவேலன், பாரி புத்தகப்பண்ணை, 184/88, பிராட்வே, சென்னை 108, பக் 96, விலை 30ரூ.
நீதி நெறி விளக்கம் என்னும் அறநூலை இயற்றியவர் குமரகுரபரர் ஆவர். திருக்குறளை அடியொற்றி எழுந்த நூல்களுள் இது தலையாயது. 102 பாடல்களைக் கொண்டது. நீதிநூல்களுள் ஒன்றான இதற்கு தெளிவுரை எழுதியர் இரா. குமரவேலன் என்னும் ஆசிரியர். சில ஆண்டுகளே வாழும் மனிதருக்கு, கல்வியைக் காட்டிலும் மிகச் சிறந்ததாகிய துணை வேறொன்றும் இல்லை. கல்வி என்பது துவங்கும்போது துன்பம் தருவதாகத் தோன்றினாலும், உண்மையில் இன்பத்தையே கொடுக்கும். அது மடமையை அழித்து, அறிவை அகலப்படுத்தும் என்று கல்வியின் சிறப்பை ஆசிரியர் எடுத்துரைககிறார். அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கின் வழியே தெளிவுபட எடுத்துரைக்கிறார் இந்நூலாசிரியர். திருக்குறள் நாலடியார் போன்ற அறநூல்களை ஒப்பிட்டு நோக்கியும், அருஞ்சொற்பொருள் விளக்கம் தந்துள்ளதும் பாராட்டுக்குரியது. -ராஜ். நன்றி: தினமலர் 16.10.2011