வரப்பெற்றோம்
வரப்பெற்றோம் நீதி நூல்கள்(நன்னெறிச் செல்வங்கள்), நல்லாமூர் முனைவர் கோ. பெரியண்ணன், வனிதா பதிப்பகம், 11, நானா தெரு, பாண்டிபஜார், தி.நகர், சென்னை 17, பக். 160, விலை 70ரூ. ஆத்திசூடி மூதலான ஒன்பது நீதி நூல்களை சேர்த்து, கருத்துரையுடன் வெளிப்பட்டிருக்கும் இந்நூல், மாணவர்கள் மட்டுமின்றி பெற்றோரும் படித்து பயன்பெறத்தக்க நூல். -சிவா. பாதுகாப்பட வேண்டிய கலைக்கருவூலங்கள், சாந்தினி, ஓவியர் ஸுபா, பண்மொழி பதிப்பகம், சி. விகாஸ் அடுக்ககம், 19/8, பால கிருண்ணா தெரு, மயிலாப்பூர், சென்னை 4, பக். 200, டெம்மி விலை 100ரூ ஓவுயங ஸுபாதூரிகையும் பிடிப்பார். பேனாவும் பிடிப்பார். தூரிகையால் ஓவியம் தீட்டினால், பேனாவினால் சொல்லோவியமும் தீட்டிவிடுவார். மேலபாடி விநாயகர் முதல், கலை துணுக்குகள் மூடிய, 26 அற்புதமான கட்டுரைகள் நூலில் இடம் பெற்றுள்ளன. நூலில் நிறைய புகைப்படங்கள், ஓவியங்கள் உண்டு. -எஸ். திருமலை. உபநிஷத்துக்கள் அறிவோமா?, பக். 128, விலை 60ரூ. பாலஅர்த்தநாரீஸ்வரர், கடலங்குடி பப்ளிகேஷன்ஸ், 36, நடேச அய்யர் தெரு, தி.நகர், சென்னை 17, மனச்சாந்திக்கு எளிய வழிகள், பக். 160, விலை 65ரூ. பாலஅர்த்தநாரீஸ்வரர், கடலங்குடி பப்ளிகேஷன்ஸ், 36, நடேச அய்யர் தெரு, தி.நகர், சென்னை 17, இரண்டு நூல்களும், ஆன்மிகத்தை எளிதாக அறிய தகவல்கள் தருகின்றன. அமைதியாக இருந்து இறைவனை நாடும் முறையை வேத, உபநிஷதக் கருத்துக்களைக் கொண்டு முதல் நூல் விளக்குகிறது. இரண்டாம் நூலில் நடைமுறைத் தகவல்களைக் கொண்டு உண்மையான அமைதி எது என்று விளக்கப்பட்டிருக்கிறது. ஸமத்துவ சாஸ்தா, அய்யப்பன் புராணம், தத்துவம் மற்றும் பஜனைப்பாடல்கள் அடங்கியது, அய்யப்பதாசன் எஸ். வீரமணி அய்யர், கிரி டிரேடிங் பிரைவேட் லிமிடெட், சென்னை 4, பக். 256, விலை 1220ரூ. சென்னை மடிப்பாக்கத்தைச் சேர்ந்த குருசாமியான ஆசிரியர் சபரிமலை அய்யப்பன் குறித்து பல்வேறு தலைப்புகளில் விளக்கமாக எழுதிய நூல் பக்தர்களுக்கு உதவும். நன்றி: தினமலர், 4/12/2011.