முத்திரைச் சிறுகதைகள்

முத்திரைச் சிறுகதைகள், ஆர்னிகா நாசர், மேகதூதன் பதிப்பகம், 7, சின்னப்ப ராவுத்தர் தெரு, திருவல்லிக்கேணி, சென்னை 5, பக். 208, விலை 130ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-718-0.html

ஆர்னிகா நாசர் நிறைய இதழ்களில் அடிக்கடி எழுதுபவர். பிரபலமான எழுத்தாளர். இவருக்கென்று ஒரு பெரிய வாசகர் கூட்டம் இருக்கின்றது. இவர் எழுதும் பாணியில், புதுமை இருக்கும். எழுத எடுத்துக் கொள்ளும் கதை கருக்களில் புதுமையும், வித்தியாசமும் இருக்கும். ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாவல்களும் எழுதியுள்ள ஆர்னிகா நாசர், தாம் எழுதியவற்றுள் சிறந்த முத்திரை கதைகள் என 42 சிறுகதைகளை தேர்வு செய்து இந்தத் தொகுப்பை தமிழ் கூறும் நல்லுலகுக்கு வழங்கியிருக்கிறார். சிறுகதை இலக்கியத்திற்கு செழுமை சேர்க்கும் தொகுப்பு.  

—-

பழமையான ஞானம், புதுமையான உலகம், தலாய் லாமா, தமிழில்-டி. வெங்கடகிருஷ்ணன், கண்ணதாசன் பதிப்பகம், 23, கண்ணதாசன் சாலை, தி. நகர், சென்னை 17, பக். 272, விலை 125ரூ. TO buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-606-9.html

தவத்திரு தலாய்லாமா அவர்களின் Ancient Wisdom Modern World என்ற ஆங்கில நூலின் தமிழாக்கமே இந்த நூல். எந்த தனி மனிதன் உடன்பாட்டு எண்ணங்களோடு, நன்னெறிகளையும் கொண்டிருக்கிறானோ அவன் சந்தோஷமாகவும், நிம்மதியாகவும் இருக்கிறான் என்று கூறும் தலாய்லாமா, உடன்பாட்டு நன்னெறி ஒழுக்கம் என்ற வார்த்தையின் அர்த்தத்தை விளக்க முயற்சித்திருக்கிறார். நாமும் சில இடங்களில் பலமுறை திரும்பப் படித்து புரிந்துகொள்ள முயற்சிக்க வேண்டும். -சிவா.  

—-

 

அமரர் கல்கி நினைவு சிறுகதை போட்டியில் பரிசு பெற்ற கதைகள், வசந்தா பிரசுரம், 15, ஜெயசங்கர் தெரு, மேற்கு மாம்பலம், சென்னை 33, பக். 118, விலை 50ரூ.

ஆண்டுதோறும் கல்கி இதழ் நடத்தும் சிறுகதை போட்டியில் கலந்துகொண்டு பரிசு பெற்ற கதைகளுக்கு வாசகர்களிடையே சிறந்த வரவேற்பு உண்டு. பத்து எழுத்தாளர்களின் 11 சிறுகதைகள் கொண்ட இந்த தொகுப்பு, வாசகனை திருப்திபடுத்தக்கூடியது. ஏ.ஏ. ஹெச்.கே.கோரி, இருமுறை பரிசு பெற்றுள்ளார். போட்டிக்கு வந்த கதைகளுள் சிறந்த கதை என்பதான சிறப்பான சிறுகதைகளை வாசிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது -ஜனகன். நன்றி : தினமலர், 4/12/2011.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *