செல்வம் கொழிக்கச் செய்யும் மகாலட்சுமி பூஜை
செல்வம் கொழிக்கச் செய்யும் மகாலட்சுமி பூஜை, பரமஹம்ச ஸ்ரீமத் பரத்வாஜ் சுவாமிகள், வனிதா பதிப்பகம், 11, நானாதெரு, பாண்டிபஜார், தி.நகர், சென்னை 17, பக். 304, விலை 110ரூ
இந்தக் கலியுகத்தில் நேர்வழியில் செல்வத்தைக் குவிக்க முடியாது என்றுதான் பலரும் நினைக்கின்றனர். ஆனால் நேர்வழியில் செல்வத்தைக் குவிக்க முடியும். அம்மாதிரி நேர்வழியில் குவியும் செல்வம்தான் நிலைத்து நிற்கும், துன்பமே தராத செல்வமாக இருக்கும் என்கிறார் நூலாசிரியர். நேர்வழியில் செல்வத்தை குவிக்க, மகாலட்சுமி திருவிளக்கு பூஜையை அதற்கான விதிமுறைகளைப் பின்பற்றி செய்ய வேண்டும் என்று அவற்றை விளக்குகிறார். நல்ல பெரிய எழுத்தில் பல்வேறு ஸ்ரீலட்சுமி ஸ்தோத்திரங்கள் அடங்கியது இந்த நூல். -சிவா.
—-
தமிழக்கலைகள் (பதினொரு கலைகள் அடங்கியது), டாக்டர மா. ராசமாணிக்கனார், முல்லை பதிப்பகம், 323.10, கதிரவன் காலனி, அண்ணா நகர் மேற்கு, சென்னை 40, பக். 160, விலை 60ரூ
கட்டக்கலை, ஓவியக் கலை, சிற்பக் கலை, வார்ப்புக் கலை, இசைக்கலை, நடனக் கலை, நாடகக்கலை, மருத்துவக் கலை, இலக்கியம், சமயக்கலை, தத்துவக் கலை முதலியன பற்றிச் சொல்லும் இலக்கியப் புதையல். பத்தினிக் கோவில், சித்தன்ன வாசல் ஓவியங்கள், நாயன்மார் வார்ப்புச் சிலைகள், தேவாரம் குறிக்கும் இசைக் கருவிகள், மாதவி ஆடிய பதினொராடல், திருக்குறளில் மருத்துவம், சமண சமயத் தத்துவம், பவுத்த சமய தத்துவம், அத்வைதம், விசிஷ்டாத் வைதம், துவைதம், சைவ சித்தாந்தம் எனப் பல கூறுகள் அலசப்படுகின்றன. அறிவுப்பெட்டகம். -எஸ். குரு. நன்றி: தினமலர் 16.10.2011