பணம் கொட்டும் பண்ணைத் தொழில்கள்
பணம் கொட்டும் பண்ணைத் தொழில்கள், ஆர். குமரேசன், விகடன் பிரசுரம், சென்னை 2, பக். 128, விலை 75ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-853-4.html
நலிந்து வரும் விவசாயத் தொழிலால் அன்றாடத் தேவைகளையே சமாளிக்க விவசாயிகள் சிரமப்பட்டு வரும் நிலையில் சுயதொழில் மூலம் வருமானம் பெறுவதற்கான வழிகளைத் தெரிவிக்கிறது இந்த நூல். வாழ வழி தேடி கிராமங்களில் இருந்து நகரங்களுக்கு மக்கள் இடம் பெயர்வதைத் தவிர்க்க சில ஆயிரம் ரூபாய் முதலீட்டில் குறைந்த இட வசதியில், ஓய்வு நேரத்தை மட்டும் செலவழித்து, தேனீ, காளான், காடை, வான்கோழி, புறா, வாத்து ஆகியவற்றையும் வளர்த்து கூடுதல் வருமானம் பெறலாம் என்கிறார் நூல் ஆசிரியர். மேலும் கிராமப்புறங்களில் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படும் பாலில் இருந்து பனீர் தயாரித்து விவசாயிகள் செல்வந்தராகலாம் என்பதை எடுத்துக்காட்டுகளுடன் தெரிவித்திருப்பது சிறப்பு. சுய தொழில் செய்து வருமானம் ஈட்டியவர்களின் அனுபவத்துடன் நூலைப் படைத்திருப்பது கூடுதல் சிறப்பு. விவசாயிகளுக்கு மட்டுமின்றி, குறைந்த ஊதியத்தில் வாழ்க்கையை ஓட்ட முடியாமல் திணறி வரும் மாத சம்பளக்காரர்கள், சுய தொழில் முனைவோர்கள், மகளிர் சுய உதவிக் குழுவினர் என வருமானத்துக்கான வாய்ப்பை எதிர்நோக்கி காத்திருக்கும் ஒவ்வொருவரும் அவசியம் படிக்க வேண்டிய புத்தகம் இது. நன்றி: தினமணி, 3/62013.
—–
நாம் இந்தியர்கள் பெருமிதம் கொள்வோம், ப. இலட்சுமணன், மாதவ் பப்ளிகேஷன்ஸ், டி3, வசந்தம் அபார்ட்மென்ட், 1/338. சபரி சாலை, மடிப்பாக்கம், சென்னை 91, பக். 80, விலை 60ரூ-
இந்து சமயத் தத்துவங்கள், இந்துக்களின் வாழ்வியல் முறைகள், சடங்கு மற்றும் சம்பிரதாயங்கள், சிவ வழிபாட்டுத் தலங்கள், உலகின் மிகப்பெரிய விஷ்ணு ஆலயம் என இந்துக்களின் பெருமைகளையும் புராதனங்களையும் பற்றிப் பேசுகிற நூல் இது. நன்றி: சக்தி விகடன், 8/1/2013.