லதா ரஜினிகாந்த் எழுதிய அவர்கள் சின்னஞ்சிறு மனிதர்கள்
அவர்கள் சின்னஞ்சிறு மனிதர்கள், லதா ரஜினிகாந்த், பூம்புகார் பதிப்பகம், விலை 270ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-015-1.html
இன்றைய குழந்தைகள் நாளைய நல்ல பிரஜைகளாக மலர, நூலாசிரியர் பல்வேறு பாரம்பரிய கருத்துக்களை இந்த நூலில் தருகிறார். அமைதிக்காக, முழுமைக்காக, ஒழுக்கத்துக்காக, நிறைவுக்காக, என்று இருந்த கல்வி மாறி பட்டத்துக்காக, பெயருக்காக, பிழைப்புக்காக, பணத்துக்காக என ஆகிவிட்டது. நமக்குள் இருப்பதை வெளிக்கொண்டு வருவதுபோய், வெளியில் இருப்பதை உள்ளுக்குள் திணிக்கும் கல்வி முறை செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்று கூறுகிறார். இப்படி பல்வேறு கருத்துக்களை கொண்ட நூல். நன்றி: தினமலர், 09/06/13.
—-
சரித்திரத்தை சிவப்பாக்கியவர்கள், ஜினேஷ்குமார் எரமம், மு.ந.புகழேந்தி, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், 41பி, சிட்கோ இண்டஸ்ரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை 98, பக். 96, விலை 50ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-005-7.html
மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின், மாதுசேதுங், ஹோசிமின், சேகுவேரா, காஸ்ட்ரோ ஆகியோரின் வாழ்க்கைக் கதைகள், பிஞ்சுகளின் மனதைக் கவரும் வகையில் இதில் சொல்லப்பட்டுள்ளன. தங்கள் வாழ்க்கைப் பாதையில் அந்தப் பிஞ்சுகளின் பீடு நடை போட, இந்நூல் பெரிதும் உதவும் சிறுவர் இலக்கியப் பொக்கிஷம். -எஸ். குரு.
—-
தமிழ்ப் பேரறிஞர்களும், ஆராய்ச்சியாளர்களும், வி. சுந்தரம், ஐ.ஏ.எஸ் (ஓய்வு), தமிழ்ப்பிரியன், வானதி பதிப்பகம், பக். 264, விலை 120ரூ.
கடின உழைப்புடன் முத்திரை பதித்த தமிழ் அறிஞர்களுள், 27 பேரின் சாதனைகளை அழகுற ஆங்கிலத்தில் உருவாக்கிய ஆசிரியரின் பணி போற்றுதற்குரியது. அதை கவினுறு, தமிழில் மொழியாக்கம் செய்திருக்கிறார் தமிழ்ப்பிரியன். சூளையில் இருந்து வெளியான ஜனப்பிரியன் தமிழ் மாத இதழ் (பக். 69) ஜி.யு. போப், அவர்களது தமிழ் ஆசிரியர் ராமானுஜக் கவிராயர் பெருமை என, தமிழகத்தின் பெருமையை உணர்த்தும் பல கட்டுரைகள் அடங்கிய நூல். நன்றி: தினமலர், 09/06/13.