அணிந்துரைகளும் வாழ்த்துரைகளும்

அணிந்துரைகளும் வாழ்த்துரைகளும், டாக்டர் ஆ. பத்மநாபன், ஐ.ஏ.எஸ்.(ஓய்வு), பூம்புகார் பதிப்பகம், சென்னை, விலை 150ரூ. தமிழ்நாட்டின் முன்னாள் தலைமை செயலாளரும், மிசோரம் மாநிலத்தின் முன்னாள் ஆளுநருமான டாக்டர் ஆ. பத்மநாபன், ஐ.ஏ.எஸ். (ஓய்வு) தொகுத்துள்ள அணிந்துரைகளும், வாழ்த்துரைகளும் என்ற நூல் அனைவரையும் சாதிக்க தூண்டுவதுடன், சிந்திக்கவும் வைக்கிறது. இந்த நூலில் இடம் பெற்றுள்ள அனைத்து வாழ்த்துரைகள் மூலம் நூலாசிரியர் சமுதாயத்துக்கும், பொதுமக்களுக்கும் ஆற்றிய சேவைகளையும், அவருடைய நற்பண்புகளையும் அனைவரும் அறிந்து கொள்ள முடிகிறது. நூலில் இடம் பெற்றுள்ள வைரவரிகள் அனைத்தும் பாலைவனச் சோலையின் பூக்களாக […]

Read more

லதா ரஜினிகாந்த் எழுதிய அவர்கள் சின்னஞ்சிறு மனிதர்கள்

அவர்கள் சின்னஞ்சிறு மனிதர்கள், லதா ரஜினிகாந்த், பூம்புகார் பதிப்பகம், விலை 270ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-015-1.html இன்றைய குழந்தைகள் நாளைய நல்ல பிரஜைகளாக மலர, நூலாசிரியர் பல்வேறு பாரம்பரிய கருத்துக்களை இந்த நூலில் தருகிறார். அமைதிக்காக, முழுமைக்காக, ஒழுக்கத்துக்காக, நிறைவுக்காக, என்று இருந்த கல்வி மாறி பட்டத்துக்காக, பெயருக்காக, பிழைப்புக்காக, பணத்துக்காக என ஆகிவிட்டது. நமக்குள் இருப்பதை வெளிக்கொண்டு வருவதுபோய், வெளியில் இருப்பதை உள்ளுக்குள் திணிக்கும் கல்வி முறை செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்று கூறுகிறார். இப்படி பல்வேறு […]

Read more