அணிந்துரைகளும் வாழ்த்துரைகளும்
அணிந்துரைகளும் வாழ்த்துரைகளும், டாக்டர் ஆ. பத்மநாபன், ஐ.ஏ.எஸ்.(ஓய்வு), பூம்புகார் பதிப்பகம், சென்னை, விலை 150ரூ.
தமிழ்நாட்டின் முன்னாள் தலைமை செயலாளரும், மிசோரம் மாநிலத்தின் முன்னாள் ஆளுநருமான டாக்டர் ஆ. பத்மநாபன், ஐ.ஏ.எஸ். (ஓய்வு) தொகுத்துள்ள அணிந்துரைகளும், வாழ்த்துரைகளும் என்ற நூல் அனைவரையும் சாதிக்க தூண்டுவதுடன், சிந்திக்கவும் வைக்கிறது. இந்த நூலில் இடம் பெற்றுள்ள அனைத்து வாழ்த்துரைகள் மூலம் நூலாசிரியர் சமுதாயத்துக்கும், பொதுமக்களுக்கும் ஆற்றிய சேவைகளையும், அவருடைய நற்பண்புகளையும் அனைவரும் அறிந்து கொள்ள முடிகிறது. நூலில் இடம் பெற்றுள்ள வைரவரிகள் அனைத்தும் பாலைவனச் சோலையின் பூக்களாக திகழ்கின்றன. நன்றி: தினத்தந்தி, 19/8/2015.
—-
என்னப் பெத்த ஆத்தா, சூரை ப.வ.சு. பிரபாகர், வாசகன் பதிப்பகம், விலை 55ரூ.
அன்னையை வணங்குங்கள், அவளின் அன்பைவிட உலகில் வேறொன்றுமில்லை என்பதை மையமாக வைத்து எளிய நடையில் எழுதப்பட்ட கவிதை நூல். நன்றி: தினத்தந்தி, 19/8/2015.