அறியப்படாததமிழகம்

அறியப்படாததமிழகம், தொ. பரமசிவன், காலச்சுவடு பதிப்பகம், 669, கே.கே,பி, சாலை, நாகர்கோவில் 629001, விலை 100ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-049-2.html

தமிழ்நாட்டில் திருமணத்தில் இருந்து கோவில் விழாக்கள் வரை இடத்துக்கு இடம் மாறுபடுகிறது. அதுபற்றி ஆராய்ந்து, பல சுவையான தகவல்களைக் கொடுத்துள்ளார், பேராசிரியர் தொ. பரமசிவன். தென்னை மரம் பற்றி தொல்காப்பியத்திலும், சங்க இலக்கியங்களிலும் எவ்வித குறிப்பும் இல்லை. கி.பி. ஏழாம் நூற்றாண்டு அளவில் எழுந்த எந்த பக்தி இலக்கியத்திலும், கோவில்களில் தேங்காய் உடைக்கப்பட்டதாக குறிப்பிடப்படவில்லை. தமிழர் திருமணத்தில் தாலி உண்டா, இல்லையா என்ற விவாதம் நீண்ட காலாக நடந்து வருகிறது. அதுபற்றிய விவரங்களையும் ஆசிரியர் விளக்கமாக விவரித்துள்ளார். அறியப்படாத தமிழகத்தை அறிந்து கொள்ள இந்த நூல் பெரிதும் பயன்படுகிறது.  

—-

 

மகாவீரர், அ.லெ. நடராஜன், சிடு நூலகம், 9, பாரதிநகர் முதல் தெரு, தி.நகர், சென்னை 17, விலை 100ரூ.

அறநெறிகளையும் துறவறத்தையும் வலியுறுத்திய சிறப்புமிக்க ஜைன மதத்தின் 24வது தீர்த்தங்கரராக தோன்றியவர் மகாவீரர் என்ற மகான். இவரது வரலாற்றையும், சிறப்புகளையும் போதனைகளையும் விரிவாக எடுத்துரைக்கும் விதமாக இந்நூல் திகழ்கிறது.  

—-

 

மரியாதை ராமன் கதைகள், குன்றில்குமார், ராஜமாணிக்கம்மாள் பப்ளிகேஷன்ஸ், 106/4, ஜானிஜான்கான் ரோடு, ராயப்பேட்டை, சென்னை 14, விலை60ரூ.

சட்டம் எதுவும் படிக்காமல் மிகுந்த நுணுக்கமாகவும், அபார அறிவுடனும் செயல்பட்டு அனைவரும் ஆச்சரியப்படும் வகையில் மரியாதை ராமன் அளித்த தீர்ப்பு கதைகள் எப்போதும் படிக்க சுவாரசியமானவை. சிந்திக்கவும் தூண்டும் வகையில் இடம்பெற்றுள்ள 15 கதைகளும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளும் ஏனையவர்களும் படித்து மகிழ வேண்டியவை. நன்றி: தினத்தந்தி 15/5/2013  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *