இந்தியாவில் ஓரினப்பால்
இந்தியாவில் ஓரினப்பால், முனைவர் கி. அய்யப்பன், விசாலாட்சி பதிப்பகம், பக். 128, விலை 100ரூ.
ஓரினச் சேர்க்கையை பற்றி விரிவாகவும், விளக்கமாகவும் இந்நூலில் எழுதியிருக்கும் ஆசிரியரின் முயற்சி, மிகத் தெளிவானதுதான். நம்மில் பெரும்பாலானோர் ஓரினச் சேர்க்கை என்ற வார்த்தையை கேட்டாலே, முகம் சுளிப்பது உண்டு. ஓரினச் சேர்க்கையை பல மதங்களும் வன்மையாக கண்டிக்கவே செய்கின்றன. இந்தியாவில் 25 லட்சம் ஓரினச் சேர்க்கையாளர்கள் இருப்பதாக புள்ளி விவரம் கூறுகிறது. இந்தியன் பீனல் கோர்ட் 377ன்படி, ஓரினச் சேர்க்கை என்பது தண்டனைக் குரிய குற்றமாக இருந்தது. ஆனால் டில்லி உயர்நிதிமன்றம் ஜுலை 2, 2009ல் தன் ஒரு தீர்ப்பின் மூலம் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியது. இத்துடன், ஓரினச் சேர்க்கையை ஆதரிக்கும் ஒரு நாடு என்ற வகையில் 127வது நாடாக இந்தியா ஆகிவிட்டது. இந்தியக் கலாசாரம் குடும்ப அமைப்புக்கு, வேட்டுவைக்கும் இந்த ஓரினச் சேர்க்கை பற்றி ஓரளவு விவரம் தெரிந்து கொள்ள வேண்டும் என்று விரும்புகிறவர் நூலைப் படிக்கலாம்.
—-
திருக்குறள் உவமைகள், முல்லை பி.எல்.முத்தையா, பக். 128. விலை 50ரூ.
அய்யன் திருக்குறளில் ஆழப்புலமை கொண்ட இந்நூலாசிரியர், திருக்குறள் கடலில் மூழ்கி எடுத்த 150க்கும் மேற்பட்ட உவமைக் குவியலை கையடக்கப் புத்தகமாய் 128 பக்கங்களில் மிக அற்புதமாகத் தந்துள்ளார். செயல் உவமை, பயன் உவமை, வடிவ உவமை, நிற உவமை என வகுத்து திருக்குறளில் எங்கெங்க எவ்வாறு பயன்படுத்தப்பட்டுள்ளது என திருக்குறளோடு ஒப்பிட்டு பதிவு செய்திருப்பது சிறப்பாகும். சொள்பொழிவாளர்கள் போன்றோருக்கு, இது துணை நூல் போன்றது. -குமரய்யா. நன்றி: தினமலர், 14/7/13.