தேசத்தை நேசிப்போம்

தேசத்தை நேசிப்போம், செந்தமிழ்த்தாசன், இளைஞர் இந்தியா புத்தகாலயம், 109, பெருமாள் கோயில் தெரு, மாதவரம், சென்னை 60, விலை 150ரூ.

இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றைக் கூறும் நூல். சுதந்திரப் போராட்ட வீரர்கள் நாட்டுக்காக உயிர்த்தியாகம் செய்த தியாகிகள் ஆகியோருடைய வாழ்க்கைக் குறிப்புகளும் உள்ளன. இளைய தலைமுறையினர், சுதந்திரப் போராட்டம் பற்றி சிறிதளவே அறிந்திருப்பார்கள். அவர்கள் இந்தப் புத்தகத்தைப் படித்தால் முழுமையாக அறிந்து கொள்வார்கள். சுருக்கமாகச் சொன்னால் சுதந்திரப் போராட்டம் பற்றி அறிந்து கொள்ள சிறந்த புத்தகம்.  

—-

 

திருக்குறள் கூறும் ஆன்மிகம், யோகி, தெய்வப்புலவர் தமிழ் இயல்பியல் ஆராய்ச்சிக்கூடம், 1/519, வடக்குத் தெரு, நாட்கோ காலனி, கொட்டிவாக்கம், சென்னை 41, விலை 100ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-158-2.html

இனம், மொழி, சமயம், நாடு கடந்து உலகம் முழுவதும் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட நூல் திருக்குறள். மனிதனை வழிநடத்தும் வாழ்க்கை பாடவியலைக் கொண்ட திருக்குறளில் புதைந்து கிடக்கும் ஆழ்ந்த ஆன்மிக கருத்துக்களை அனைவரும் அறியும்விதமாக தெரியப்படுத்தியிருக்கிறார் நூல் ஆசிரியர்.  

—-

 

மூலிகை குறிப்பேடு, டாக்டர் எஸ்.வி.எஸ். அண்டு சன்ஸ், 161, சிறுபஜார், சேலம் 636001, விலை 225ரூ.

இதை மூலிகைக் களஞ்சியம் என்றே குறிப்பிடலாம். மூலிகைகளின் பெயர், அதை எந்த நோய்க்குப் பயன்படுத்தலாம் என்ற விவரம் கொடுக்கப்பட்டுள்ளது. மூலிகைகள் பற்றிய முக்கிய புத்தகம் என்று கூறுலாம். நன்றி: தினத்தந்தி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *