மன்னிப்பின் மகத்துவம்

மன்னிப்பின் மகத்துவம், தலாய்லாமா, கண்ணதாசன் பதிப்பகம், 23, கண்ணதாசன் சாலை, தியாகராய நகர், சென்னை 17, பக். 256, விலை 125ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-606-7.html

தலாய் லாமா அவர்களின் தி விஸ்டம் ஆப் ஃபார்கிவ் நெஸ் என்ற மூல ஆங்கில நூலின் தமிழாக்கம் இந்த நூல். திபெத் நாட்டு மதத் தலைவரும், அரசுத் தலைவருமான அவர் சீனா, திபெத்தை ஆக்கிரமித்து கொண்டபோது அங்கிருந்து தப்பி, இந்தியாவில் தஞ்சம் புகுந்து திபெத் சுதந்திரம் பெற அகிம்சா வழியில் போராடி வருபவர். நியாயமாக பார்க்கப்போனால் அவர் வெறுப்பால், கோபத்தால் கசப்புணர்வால் நிறைந்திருக்க வேண்டும். ஆனால் அப்படியில்லாமல் தன்னையும், தன் மக்களையும் இவ்வளவு மோசமாக நடத்தியவர்கள்பால் கருணையும், அன்பும் காட்டுகிறார் என்றால், மன்னிப்பின் மகத்துவத்தைப் புரிந்துகொண்டு, அதைக் கடைப்பிடிப்பதிலும் தீவிரமாக இருக்கிறார் என்பதுதானே பொருள்? படித்துப் பயன்பெற வேண்டிய நூல். -சிவா.  

—-

 

அதிசயம் நிறைந்த ஆவுடையார் கோயில், முனைவர் சிவப்பிரியா, மணிவாசகர் பதிப்பகம், 31 சிங்கர் தெரு, பாரிமுனை, சென்னை 108, பக். 80, விலை 30ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-863-2.html

ஆவுடையார் கோவில் என்று அழைக்கப்பெறும் திருப்பெருந்துறைத் திருத்தலம் புதுக்கோட்டை மாவட்டத்தில், அறந்தாங்கி என்ற ஊருக்கு அருகே உள்ளது. தமிழ் இலக்கியங்களிலும், வடமொழி இலக்கியங்களிலும் திருப்பெருந்துறை சிறப்பாக போற்றப்படுகின்றது. நந்தி தேவரின் அவதாரமான மாணிக்கவாசக பெருமானுக்கு பரமேஸ்வரன் நேரே தோன்றி திருக்காட்சி தந்து அருளிய திருத்தலமான ஆவுடையார் கோவிலின் அருமை பெருமைகளையும், அதிசயங்களையும், அற்புதங்களையும், மாணிக்கவாசகப் பெருமானின் தெய்வீக வாழக்கை வரலாற்று அனுபவங்களையும் இந்த நூல் மிகத் தெளிவாக திருவாசகச் சான்றுகளுடன் சொல்கிறது. ஆன்மிக பொக்கிஷம். -எஸ். குரு. நன்றி: தினமலர், 11/12/11.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *