உனக்குள்ளே ஒரு குரல்
உனக்குள்ளே ஒரு குரல், டாக்டர் ராஜன் சங்கரன், விகடன் பிரசுரம், 757, அண்ணா சாலை, சென்னை 2, விலை 145ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-865-8.html
உன்னை நீ அறிவாய் உன்னை நீ குணப்படுத்திக் கொள்வாய் என்பதை அடிப்படையாகக் கொண்டு ஆழ்மனதின் எண்ண ஓட்டங்களை அறிந்து கொள்ள ஆர்வம் உடையவர்களுக்கு அத்தகைய கருத்துகளை அறிமுகம் செய்து வைப்பதே இந்த நூலின் நோக்கம். இன்றைய நவீன ஹோமியோபதி சிகிச்சை முறை, மற்ற சிகிச்சை முறையிலிருந்து மாறுபட்டிருப்பதை விளக்குகிறது இந்த நூல். அரிப்பு, ஆஸ்துமா, இதய வலி என்று எந்தவித பாதிப்புடனும் நோயாளிகள் வந்தாலும், அவர்களுடன் பொறுமையாகப் பேசி, கேள்விகள் கேட்டு, அவர்களது ஆழ்மனது உணர்வுகளை கண்டறிந்து அதற்கேற்ப மருந்து கொடுத்து குணப்படுத்தும் முறைகளை விளக்குகிறார் நூலாசிரியர் ராஜன் சங்கரன். இந்த கட்டுரைகளில், டாக்டர் நோயாளிகளின் உரையாடல்கள் இடம் பெற்றிருப்பது சிறப்பிற்குரியது.
—-
இந்திய அரசியல் சிற்பி முலாயம்சிங், கவிஞர் சு. வாசு, வசந்தா பதிப்பகம், 26, குறுக்குத் தெரு,சோசப் குடியிருப்பு, ஆதம்பாக்கம், சென்னை 88, விலை 150ரூ.
சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவின் பிறப்பு, இளம்பருவம், அரசியல் பிரவேசம் உள்ளிட்ட அனைத்தையும் உள்ளடக்கிய வாழ்க்கை வரலாற்று நூல் இது. ஆசிரியராக வாழ்வை தொடங்கிய அவர் சிறந்த அரசியல் தலைவர் ஆனதன் பின்னணி மற்றும் அவரது ஆட்சியில் உத்தரபிரதேசம் கண்ட வளர்ச்சிகள் உள்ளிட்ட பலவற்றை இந்நூல் விளக்குகிறது. அவர் சிறந்த குத்துச்சண்டை வீரர் என்பதை அறியும்போது வியப்பு மேலிடுகிறது.
—-
சர்க்கரை நோய்க்கான காரணங்கள், உணவு முறைகள், பத்மபிரியா, மகா பதிப்பகம், 3, சாயிபாபா கோவில் தெரு, கவுரிவாக்கம், சென்னை 73, விலை 50ரூ.
சர்க்கரை நோய் உண்டாவதற்கான காரணங்களும், அந்நோயிளிகள் சாப்பிட வேண்டிய உணவு வகைகளும் குறிப்பிடப்பட்டு உள்ளன. சர்க்கரை நோயாளிகளின் கையில் இருக்க வேண்டிய நூல். நன்றி: தினத்தந்தி, 7/8/13.
