ராமனும் ராமசாமியும்
ராமனும் ராமசாமியும், ம. பிரகாஷ், காவ்யா, 16, இரண்டாம் குறுக்குத் தெரு, டிரஸ்ட்புரம், கோடம்பாக்கம், சென்னை 24, விலை 150ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-313-6.html
ராமாயணத்தை பெரியார் எதிர்த்ததற்கான காரணங்கள் குறித்து நூலில் விரிவாக எழுதியுள்ளார் ஆசிரியர். கந்தபுராணத்தை அடிப்படையாக வைத்தே ராமாயணமும் எழுதப்பட்டுள்ளத என்றும் அவர் சான்றுகளுடன் விளக்கியுள்ளார்.பெரியாரைத் தொடர்ந்து எம்.ஆர்.ராதா, பாரதிதாசன் உள்ளிட்டோர் ராமாயணத்தை எதிர்த்து வெளியிட்டுள்ள கருத்துக்களையும் நூலில் தொகுத்துள்ளார் ஆசிரியர். நன்றி: தினதந்தி,11/9/2013.
—-
இலக்கிய நுகர்ச்சி, இரா. குமரவேலன், விழிகள் பதிப்பகம், 8.எம், 139, 7ஆவது குறுக்குத் தெரு, திருவள்ளுவர் நகர், திருவான்மியூர் விரிவு, சென்னை 41.
தம்மை ஓர் எளிய ஆன்மாவாக, மனிதராகக் கருதினாரே அல்லாமல் பெரு ஞானியாகவோ, அருளாளராகவோ கருத அவர் மனம் இடம் தரவில்லை. சாமி அல்லது சுவாமிகள் என்று வழங்குவதில் ஆரவாரம் தோன்றுவதாக அவர் கருதியுள்ளார். அரைகுறையாகத் துறவு மேற்கொண்ட பலர் தம்மை சாமிகள் என்று தம்மைத் தாமே அழைத்துக் கொள்வதிலும் பிறர் அழைப்பதிலும் புளகாங்கிதம் அடைவதை நோக்கும்போது நமக்கு இது ஒரு வியப்பான ஒன்றாகவே – புரட்சித்தன்மை உடையதாகவே தோன்றுகிறது என்கிறார் நூலாசிரியர் இராமலிங்க அடிகள் ஒரு புரட்சியாளர் என்ற கட்டுரையில். குணங்குடியார் பக்குவம் பெற்ற சூஃபி ஞானி. பல்வேறு நெறிகளைக் கொண்ட சூஃபி மரபில் இவர் காதிரிய்யா என்னும் நெறியில் சென்றவர். சூஃபிகள் ஞானகுரு ஒருவர் மூலமே இறைவனை இப்பிறவியில் அடைய முடியும் என்று கருதினர். குணங்குடியாரும் இங்ஙனமே குருநாதர்களிடம் ஆன்மிகத்தை உணர்ந்து சிறந்த சித்தர் ஆனார் என்பதை குணங்குடிமஸ்தான் பாடலில் சூஃபி நெறி என்ற கட்டுரையில் பதிவு செய்துள்ளார். மேலும் ஆ. சிங்காரவேலு முதலியாரின் அபிதான சிந்தாமணி, அறிவைத் தேடிய அப்பாதுரையார், செந்தமிழ்க் காவலர் அ.சிதம்பரநாதனார், அறிஞர் மா. இராசமாணிக்கனாரின் ஆழ்வார்கள் கால ஆய்வு மாண்பு, ஆய்வில் சில சிக்கல்கள், ஔவையின் அருட்பா உரை ஆகிய கட்டுரைகளும், முத்தான தகவல்களை அள்ளித் தருகின்றன. கல்வெட்டுகள் உணர்த்தும் குற்றமும் தண்டனையும் பகுதி படித்தறிய வேண்டிய அரிய கதைத்கொத்து. நன்றி: தினமணி, 15/9/2013