மாசாணக் கால்வாய்
மாசாணக் கால்வாய், டி.எஸ்.புத்தகமாளிகை, 15/6, ஜெய்சங்கர் தெரு, மேற்கு மாம்பலம், சென்னை 33, விலை 140ரூ.
இந்த நாவல் மாசாணக் கால்வாயில் ஆரம்பித்து அதே கால்வாயில் முடிவதாக அமைந்து இருக்கிறது. கிராமத்து அழகை ரசித்தது போன்று சுவைபட எழுதி உள்ளார் ஆசிரியர் கலைநன்மணி மகிழ்நன். கணவர், மனைவி தாம்பத்ய வாழ்க்கையை ஒரு சங்கீத ரசனையின் மலம் அவருடைய பேனா சித்தரித்து விளக்கி இருப்பது இளஉள்ளங்களுக்கு விருந்து சாப்பிட்ட மகிழ்ச்சி. படிக்கப் படிக்க ஒரு ஆவலை தூண்டுகிறது இந்த நூல். நன்றி: தினத்தந்தி, 18/9/2013.
—-
சிவனாரின் முத்து விழா மலர், ம.சா. அறிவுடைநம்பி, கருமணி பதிப்பகம், புதுச்சேரி 8, பக். 646, விலை 400ரூ.
தமிழறிஞரும், பல தமிழ் அமைப்புகள், இலக்கிய மன்றங்களில் தீவிரமாகச் செயல்பட்டவரும், பல தமிழ் சார்ந்த விழாக்களை நடத்தியவருமான ச.சாம்பசிவனாரின் 80ஆம் அகவை நிறைவு விழாவையொட்டி வெளியிடப்பட்டளள் நூல். இந்நூலில் ச.சாம்பசிவனார் எழுதிய 100க்கும் அதிகமான நூற்களைப் பற்றிய தகவல்கள், அவற்றிற்கு வெளிவந்த விமர்சனங்கள், சாம்பசிவனார் எபதிய அவருடைய வாழ்க்கை நிகழ்வுகள் பற்றிய கட்டுரைகள் தொகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளன. சாம்பசிவனாரின் முத்துவிழாவையொட்டி பல்வேறு அறிஞர்களால் எழுதப்பட்ட வாழ்த்துப் பாக்கள், கட்டுரைகள், அவருடைய படைப்புகள் குறித்த திறனாய்வுக் கட்டுரைகள் அனைத்தும் தொகுத்துக் கொடுக்கப்பட்டுள்ள அரிய நூல். தமிழறிஞர் சாம்பசிவனாருக்கு சிறப்பு செய்யும்விதமாக மலர்ந்திருக்கும் இந்நூல் அவரைப் பற்றி முழுமையாகத் தெரிந்து கொள்ள உதவுகிறது. நன்றி: தினமணி, 12/3/2012.